சினிமா
அடடே இது ரொம்ப நல்லா இருக்கே.! கணவருடன் இருக்கும் அழகிய போட்டோஷைப் பகிர்ந்த ரித்விகா.!

அடடே இது ரொம்ப நல்லா இருக்கே.! கணவருடன் இருக்கும் அழகிய போட்டோஷைப் பகிர்ந்த ரித்விகா.!
தமிழ் சினிமா மற்றும் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி மூலம் மக்கள் மனங்களைக் கவர்ந்தவர் நடிகை ரித்விகா. தனது நேர்மையான குணம், சக்திவாய்ந்த பேச்சு மற்றும் தெளிவான எண்ணங்களால் பல ரசிகர்களை தன்னகத்தே கொண்டிருந்தார். இந்நிலையில், அவரது நிச்சயதார்த்த நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றுள்ள செய்தி ரசிகர்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தது.அதுமட்டுமல்லாது, இன்று அவர் தனது Instagram மற்றும் டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் நிச்சயதார்த்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.ரித்விகாவின் வாழ்க்கைத் துணையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் வினோத் லக்ஷ்மணன். அவர் ரித்விகாவின் நீண்ட நாள் நண்பர் என்பதும் குறிப்பிடத்தக்கது.அந்தவகையில், இன்று வெளியிடப்பட்ட புகைப்படங்களில் ரித்விகா மிகவும் அழகாவும் ஸ்டைலாகவும் காணப்படுகின்றார். அத்துடன் வைரலான போட்டோஸ் 1மணி நேரத்திற்குள்ளேயே அதிகளவான லைக்கினைப் பெற்றுள்ளது.