இலங்கை
அமெரிக்காவிடம் இருந்து வரிக்குறைப்புப் பெறுவோம்; அரசாங்கம் நம்பிக்கை

அமெரிக்காவிடம் இருந்து வரிக்குறைப்புப் பெறுவோம்; அரசாங்கம் நம்பிக்கை
அமெரிக்காவிடம் இருந்து வரிக்குறைப்பை பெற்றுக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. அதற்குரிய பேச்சுவார்த்தைகளும் இடம்பெற்று வருகின்றன என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது: அமெரிக்க வர்த்தகத் திணைக்களத்துடன், இலங்கைப் பிரதிநிதிகள் குழு இரு தடவைகள் வொஷிங்டனுக்குச் சென்று நேரடிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றது. நிகழ்நிலை ஊடாகவும் பலசுற்றுப் பேச்சுகள் இடம்பெற்று வருகின்றன. இதற்கமைய சாதகமான முடிவுகள் கிடைக்கப்பெறும் என நம்புகின்றோம்.
ஆரம்பத்தில் எமக்கு 44 வீதமான வரிகள் விதிக்கப்பட்டன. பின்னர் அந்த வரிகள் 30 வீதமாகக் குறைக்கப்பட்டன. இதை நல்ல அறிகுறியாகக் கருதி தொடர்ந்தும் முன்னேறிச் செல்வதற்கு எதிர்பார்த்துள்ளோம். நாட்டுக்கு முழுமையான நன்மைகளை ஏற்படுத்தும் வகையில், பேச்சுவார்த்தைகள் இடம்பெறும் என்றார்.