இலங்கை
அரசுக்கு சொந்தமான பைன் தோட்டத்தில் தீ பரவல்!

அரசுக்கு சொந்தமான பைன் தோட்டத்தில் தீ பரவல்!
பதுளை – ஹல்துமுல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள அரசாங்கத்துக்கு சொந்தமான பைன் தோட்டத்தில் தீ பரவியுள்ளதாக ஹல்துமுல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த தீ பரவல் இன்று ஏற்பட்டுள்ளதுடன் இருபது ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பு எரிந்து நாசமாகியுள்ளது.
ஹல்துமுல்ல பொலிஸார், வனவிலங்கு மற்றும் வனத்துறை அதிகாரிகளுடன் இணைந்து தீயை அணைக்க முயற்சித்தும், அப்பகுதியில் வெப்பம் மற்றும் பலத்த காற்று காரணமாக தீயை கட்டுப்படுத்த முடியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஹல்துமுல்ல பொலிஸார், வனவிலங்கு மற்றும் வனத்துறை அதிகாரிகள் தியத்தலாவ இராணுவ தீயணைப்புப் படையினரின் உதவியை நாடினர்.
வல்ஹாபுதென்ன மஹவங்குவ பகுதியில் ஏற்பட்ட தீ பரவல், தற்போது கினிகத்கல பகுதிக்கும் பரவியுள்ளதாக பதுளை அனர்த்த முகாமைத்துவ நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.