பொழுதுபோக்கு
அவன் தொழிலதிபர் இல்ல, வீட்டு வாடகை கொடுக்க பிச்சை எடுக்கிறான்; பயில்வானுக்கு சாபம் விட்ட சீரியல் நடிகை ரிஹானா!

அவன் தொழிலதிபர் இல்ல, வீட்டு வாடகை கொடுக்க பிச்சை எடுக்கிறான்; பயில்வானுக்கு சாபம் விட்ட சீரியல் நடிகை ரிஹானா!
சின்னத்திரையில் பிரபலமான நடிகையாக வலம் வரும் ரிஹானா அவ்வப்போது சினத்திரை நட்சத்திரங்கள் பிரச்சனை குறித்து தனது கருத்துக்களை பதிவு செய்வார். அந்த வகையில் நடிகர் விஷ்ணுகாந்த் – சம்யுக்தா, சீரியல் நடிகை திவ்யா ஸ்ரீதர் இடையேயான பிரச்சனைகளுக்கு கருத்து தெரிவித்து இருந்தார், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரயிலில் ராஜியின் சித்தி கேரக்டரில் நடித்து வந்த ரிஹானா ஒரு கட்டத்தில் இந்த சீரியலில் இருந்து விலகினார். இந்தநிலையில் சில நாட்களுக்கு முன்பு ரிஹானா, மீது சென்னை பூந்தமல்லி, காவல் நிலையத்தில் தொழிலதிபர் ராஜ்கண்ணன் மோசடி புகார் அளித்து இருந்தார். தொழிலதிபர் ராஜ் கண்ணன், நடிகை ரிஹானா மீது மோசடி புகார் அளித்த நிலையில், பயில்வான் ரங்கநாதன் ரிஹானாவின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் அவரது செயல்கள் குறித்து விமர்சனங்களை முன்வைத்தார்.இந்த பிரச்சனைகளுக்கு மத்தியில் ரிஹானா வாவ் தமிழாவுக்கு அளித்த பேட்டி ஒன்றில்,” ராஜ் கண்ணன் என்மீது திருமண மோசடி புகார் அளித்தார், முதல் கணவரை விவாகரத்து செய்யாமலேயே தன்னைத் திருமணம் செய்து பணம் மோசடி செய்ததாகவும் எனக்கு சுமார் 20 லட்சம் ரூபாய் வரை பணம் கொடுத்ததாகவும் குற்றம்சாட்டினார்”. ஆனால் உண்மையில் தன்னை அவர் தான் ஏமாற்றிவிட்டதாகவும், அதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும், பயில்வான் ரங்கநாதன் சொல்வது போல தான் பெரிய பங்களாவில் வசிக்கவில்லை என்றும், ஒரு சிறிய வீட்டில் கஷ்டப்பட்டு சம்பாதித்து வாழ்வதாகவும் தெரிவித்துள்ளார்.அதுமட்டுமின்றி பயில்வான் ரங்கநாதன், சீரியல் நடிகை ரிஹானாவின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் இந்த திருமண மோசடி புகார் குறித்து பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டு இருந்தார். ரிஹானாவுக்கு “தாலி என்றால் என்னவென்றே தெரியாதா?” என்றும், முதல் கணவரை விவாகரத்து செய்யாமல் இரண்டாவது ஒருவருடன் வாழ்ந்தது மிகப்பெரிய தவறு என்றும் அவர் விமர்சித்து இருந்தார். “நீயெல்லாம் ஒரு பெண்ணா?” என்று கூட அவர் பேசி இருந்தார். இதற்கெல்லாம் பதிலளிக்கும் விதமாக ரிஹானா,” ராஜ்கண்ணன் ஒன்றும் தொழிலதிபர் இல்லை, வீட்டு வாடகை கொடுக்க கூட அவனிடம் காசு இல்லை, அவனை தொலைக்காட்சி ஒன்றில் தொழிலதிபர் என்றெல்லாம் கூறி உள்ளனர். ஆனால் அப்படி இல்லை; அவன் தொழிலதிபர் இல்லை, பயில்வான் இறக்கும் நாள் தான் தனக்கு உண்மையான ரம்ஜான், பக்ரீத்” என்றெல்லாம் கூறியுள்ளார்.