Connect with us

இந்தியா

ஆடி மாத பூஜை: சபரிமலை அய்யப்பன் கோயில் நடை இன்று திறப்பு

Published

on

a

Loading

ஆடி மாத பூஜை: சபரிமலை அய்யப்பன் கோயில் நடை இன்று திறப்பு

சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆடி மாத பூஜைக்காக இன்று (ஜூலை 16, 2025) மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட உள்ளது. தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடையைத் திறந்து வைத்து தீபாராதனை செய்வார். இதைத் தொடர்ந்து கற்பூர ஆழியில் தீ மூட்டப்படும். இன்று சிறப்பு பூஜை எதுவும் நடைபெறாது. கோயில் கருவறை மற்றும் சுற்றுப்புற பகுதிகள் சுத்தம் செய்யும் பணிகள் மட்டும் நடைபெறும்.நாளை (வியாழக்கிழமை, ஜூலை 17) முதல் ஜூலை 21 வரை 5 நாட்களுக்கு, தினமும் அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படும். இந்த நாட்களில் நடைபெறும் முக்கிய பூஜைகள்:நிர்மால்ய தரிசனம்கணபதி ஹோமம்நெய் அபிஷேகம்உஷ பூஜைஉச்ச பூஜைதீபாராதனைபுஷ்பாபிஷேகம்அத்தாழ பூஜைஆகிய பல்வேறு வழிபாடுகள் நடைபெறும். ஜூலை 21 ஆம் தேதி அத்தாழ பூஜைக்குப் பிறகு, அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு இரவு 10:30 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும். பக்தர்கள் வழக்கம்போல் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். நிறை புத்தரி பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மீண்டும் ஜூலை 29 ஆம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன