Connect with us

இலங்கை

இந்திய மீனவர்களின் அத்துமீறலை கட்டுப்படுத்த பொறுப்பை மீனவர்களிடம் ஒப்படையுங்கள்!

Published

on

Loading

இந்திய மீனவர்களின் அத்துமீறலை கட்டுப்படுத்த பொறுப்பை மீனவர்களிடம் ஒப்படையுங்கள்!

தற்போது வடபகுதி கடற்பரப்பில் அதிகரித்துள்ள இந்திய மீனவர்களின் அத்துமீறலையும், சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளையும் கடற்படையால் கட்டுப்படுத்த முடியவில்லையெனில்,  அந்தப் பொறுப்புக்களை ஒரு மாதகாலத்திற்கு வடபகுதி மீனவர்களிடம் ஒப்படைக்குமாறு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.

மன்னார் – முசலி பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் நேற்று அவர் மேலும் தெரிவிக்கையில்,

Advertisement

இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகையினைத் தடுக்கவேண்டிய கடற்படையினரும், ஆட்சியாளர்களும் தொடர்ச்சியாக காரணங்களை மாத்திரம் சொல்கின்ற நிலையே காணப்படுகிறது.

அத்தோடு கடற்படையினர் இந்திய மீனவர்களின் இந்த அத்துமீறலைத் தடுப்பதற்கு டோறா படகுகள் வேண்டுமென காரணங்களை இங்கு கூறிக்கொண்டிருக்கமுடியாது. 

இந்திய மீனவர்களுடைய இத்தகைய அத்துமீறிய செயற்பாடுகளுக்கு இந்திய அரசும், இலங்கை அரசும் ஆதரவளிப்பதாகவே எம்மால் பார்க்கமுடிகிறது. 

Advertisement

இந்த விடயத்தில் கடற்படையினர் மீது மீனவ மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர்.

கடற்படையினரால் இந்திய மீனவர்களின் அத்துமீறிய செயற்பாட்டைக் கட்டுப்படுத்த முடியவில்லையெனில் முதல்வன் திரைப்படத்தில் ஒருநாள் முதலமைச்சரைப் போன்று இந்திய மீனவர்களைக் கட்டுப்படுத்தும் பொறுப்பையும், சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தும் பொறுப்பையும் எமது மீனவ மக்களிடம் ஒரு மாதத்திற்கு ஒப்படையுங்கள். என்றார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன