இலங்கை
இலங்கைக்கு ஆதரவளிப்பதில் ஈரான் உறுதியுடன் செயற்படும்; அந்தநாட்டுத் தூதுவர் தெரிவிப்பு

இலங்கைக்கு ஆதரவளிப்பதில் ஈரான் உறுதியுடன் செயற்படும்; அந்தநாட்டுத் தூதுவர் தெரிவிப்பு
பொருளாதார அபிவிருத்தி மற்றும் சர்வதேச தளங்களில் பொருளாதார அபிவிருத்தி மற்றும் சர்வதேச தளங்களில் இலங்கைக்கு ஆதரவு வழங்குவதில் ஈரான் உறுதியுடன் இருக்கின்றது என்று ஈரான் இஸ்லாமியக் குடியரசின் இலங்கைக்கான தூதுவர் கலாநிதி அலிரேசா டெல்கோஷ் தெரிவித்துள்ளார்.
இலங்கை – ஈரான் நாடாளுமன்ற நட்புறவுச் சங்கத்தை மீள உருவாக்குவதற்கான கூட்டம் சபாநாயகர் ஜகத்விக் கிரமரத்ன தலைமையில் அண்மையில் நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. அதில் விருந்தினராகக் கலந்துகொண்ட இலங்கைக்கான ஈரான் தூதுவர் கலாநிதி அலி ரெசா டெல்கோஷ் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். நட்புறவுச் சங்கத்தின் புதிய உறுப்பினர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்த ஈரான் நாட்டின் இலங்கைக்கான தூதுவர். ஈரான் மக்களிடையே இலங்கை விசேட கெளரவத்தைப் பெற்றுள்ளது. மீள உருவாக்கப்பட்டுள்ள நட்புறவுச்சங்கம் வலுவான நாடாளுமன்ற ஒத்துழைப்பு மற்றும் மக்களுக்கிடையிலான தொடர்புகளை வளர்க்கும் என்றும் தெரிவித்தார். பத்தாவது நாடாளுமன்றத்துக்கான இலங்கை – ஈரான் நாடாளுமன்ற நட்புறவுச்சங்கத்தின் தலைவராகச் சுற்றாடல் அமைச்சர் ஸ்ரீ தம்மிக பட்டபெந்தி தெரிவு செய்யப்பட்டார்.