Connect with us

பொழுதுபோக்கு

ஒரே ஒரு கொலை வழக்கால் சரிந்த முழு சாம்ராஜ்யம்; தெருவுக்கு வந்த சூப்பர் ஸ்டார் – காமெடியன்: என்னதான் நடந்தது?

Published

on

Tamil Cinema MSK MKT

Loading

ஒரே ஒரு கொலை வழக்கால் சரிந்த முழு சாம்ராஜ்யம்; தெருவுக்கு வந்த சூப்பர் ஸ்டார் – காமெடியன்: என்னதான் நடந்தது?

தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் வலம் வந்த எம்.கே.தியாகராஜபாகவதர் என்.எஸ்.கிருஷ்ணன் இருவரும் புகழின் உச்சத்தில் இருந்த காலக்கட்டத்தில், ஒரு கொலை வழக்கு அவரின் வாழ்க்கையை தலைகீழா புரட்டிபோட்டது என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் வலம் வந்த எம்.கே.தியாகராஜபாகவதர் இயக்குனர் நடிகர், தயாரிப்பாளர், பாடகர் என பன்முக திறமை கொண்டவர், நாடக நடிகராக இருந்து 1934-ம் ஆண்டு வெளியான பவளக்கொடி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து 1936-ம் ஆண்டு வெளியான சத்திய சீலன் என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார்.அதன்பிறகு தொடர்ந்து பல படங்களில் நடித்திருந்த தியாகராஜ பாகவதர், 1941-ம் ஆண்டு அசோக்குமார் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த சமயத்தில் தியாகராஜபாகவதர் உச்ச நட்சத்திரமாக இருக்க, இப்போது சினிமாவில் தனக்கான வாய்ப்பினை தேடிக் கொண்டிருந்தவர் எம்.ஜி.ஆர். தியாகராஜபாகவதரின் படப்பிடிப்பு நடைபெறும் ஸ்டூடியோவுக்கு அடிக்கடி வந்து செல்லும் எம்.ஜி.ஆரை பார்த்த அவர், அசோக் குமார் படத்தில் வாய்ப்பு கொடுத்துள்ளார்.இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது, இதனைத் தொடர்ந்து பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வந்த தியாகராஜபாகவதரிடம், 2-ம் உலகப்போரின்போது, ஆங்கிலேயர்கள் நாடகம் அல்லது திரைப்படங்களில் நடித்து எங்களுக்கு நிதி திரட்டி கொடுக்குமாறு கேட்டுள்ளனர். அதன்படி அவர்களுக்கு பெரும் நிதி திரட்டி கொடுத்த பாகவதரிடம், உங்களுக்கு என்ன வேண்டும் கேளுங்கள் என்று சொல்லி, திருச்சிக்கு அருகில் உள்ள திருவெறும்பூரை கொடுத்துள்ளனர்.இந்த பரிசை வாங்க மறுத்த பாகவதர், எங்கள் நாட்டை துண்டாக எனக்கே கொடுக்கிறீர்களா? எங்கள் நாட்டுக்கு சுதந்திரம் வேண்டும் என்று கூறியுள்ளார். ஆங்கிலேயரிடமே சவாலாக பேசிய உச்ச நடிகரான தியாகராகபாகவதர், பத்திரிக்கையாளர் லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் சிக்கி 2 வருடம் 2 மாதங்கள் சிறை தண்டனை பெற்றதை தொடர்ந்து அவரது புகழ் சரிவை சந்தித்தது. சிறையில் இருந்து விடுதலையான அவர், அதே திறமையுடன் படங்களில் நடித்திருந்தாலும், அந்த படங்கள் எதுவும் வெற்றியை ஈட்டவில்லை. உச்சத்தில் இருந்த தியாகராஜ பாகவதர் 2 வருடங்களில் அதளபாதாளத்தில் விழுந்தது போன்று வீழ்ச்சியை சந்தித்தார்.பத்திரிக்கையாளராக இருந்த லட்சுமி காந்தன் என்பவர் சினிமா நடிகர்கள் பற்றி கிசு கிசு எழுதி பிரபலமானவர். குறிப்பாக தியாகராஜபாகவதர், மற்றும் என்.எஸ்.கிருஷ்ணன் ஆகியோர் குறித்து அதிக வதந்திகளை பரப்பியுள்ளார். ஒரு கட்டத்தில் தனது நண்பரின் வீட்டுக்கு சென்றுவிட்டு, வரும்போது சிலர் அவரை தாக்கி கத்தியால் குத்திவிட்டு தப்பி சென்றுள்ளனர். ஒருநாள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர், மரணமடைந்த நிலையில், தியாகராஜபாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன் ஆகியோர் உட்பட சிலரை போலீசார் கைது செய்தனர்.இதில் மற்றவர்கள், விடுவிக்கப்பட்ட நிலையில், தியாகராஜபாகவதர் மற்றும் என்.எஸ்.கிருஷ்ணன் இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது நீதிமன்றம். இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தாலும் அதில் பலன் அளிக்காத நிலையில், சில ஆண்டுகளுக்கு பிறகு இருவரும் விடுவிக்கப்பட்டனர். ஆனால், லட்சுமிகாந்தனை கொலை செய்தது யார் என்பது இன்றுவரை மர்மமாகவே உள்ளது. அதே சமயம் இந்த வழக்கின் காரணமாக தியாகராஜ பாகவதர் என்.எஸ்.கிருஷ்ணன் இருவரின் சாம்ராஜ்யமும் சரிந்தது குறிப்பிடத்தக்கது. 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன