பொழுதுபோக்கு
கவிதையும் அடுக்கு மொழியும் மட்டுமல்ல… டி.ஆர் படத்தின் டைட்டில்களில் இத கவனிச்சீங்களா?

கவிதையும் அடுக்கு மொழியும் மட்டுமல்ல… டி.ஆர் படத்தின் டைட்டில்களில் இத கவனிச்சீங்களா?
தமிழ் சினிமாவில் பல்துறை வித்தகராக இருந்து வரும் டிராஜேந்தர், தனது படங்களில் தலைப்புகளில் இப்படி ஒரு வித்தியாசத்தை கடைபிடித்துள்ளார் என்பது பலரும் அறியாத ஒரு தகவல். இது என்ன என்று இந்த பதிவில் பார்ப்போமா?தமிழ் சினிமாவில் முன்னணி கலைஞர்களில் முக்கியமானவர் டி.ராஜேந்தர். இயக்குனர், நடிகர், பாடகர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், பாடல் ஆசிரியர், தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்ட இவர், 1980-ம் ஆண்டு வெளியான ஒரு தலை ராகம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்திற்கு, கதை, திரைக்கதை, வசனம் எழுதி கல்லூரி மாணவர் கேரக்டரில் கேமியோவாக நடித்திருப்பார்.இந்த படத்தை இயக்கியது இவர் தான் என்றும், தவிர்க்க முடியாத சில காரணங்களால் இயக்குனர் பெயர் மாற்றப்பட்டது என்றும், இன்றுவரை பேசப்பட்டு வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து, வசந்த அழைப்புகள், நெஞ்சில் ஒரு ராகம், ராகம் தேடும் பல்லவி உள்ளிட்ட படங்களை இயக்கி சிறிய கேரக்டரில் நடித்து வந்த டி.ராஜேந்தர், 1983-ம் ஆண்டு தாய் தயாரித்து இயக்கி நடித்த உயிருள்ளவரை உஷா என்ற படத்தின் மூலம் ஹீரோவாக களமிறங்கினார்.இந்த படத்தில் அவர் நடித்த ஜெயின் ஜெயபால் கேரக்டர் இன்றுவரை பேசப்பட்டு வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து தான் தயாரித்து இயக்கிய அனைத்து படங்களிலும் தானே ஹீரோவாக நடித்துள்ள டி.ராஜேந்தர், கதை, திரைக்கதை, வசனம், இசை, பாடல்கள், என பல பணிகளை மேற்கொண்டுள்ளார். கிட்டத்தட்ட 19 படங்களை இயக்கியுள்ள டி.ராஜேந்தர், ஒரு படத்தை தவிர மற்ற அனைத்து படங்களுக்கும் கதை, திரைக்கதை வசனம் எழுதி இசையமைத்துள்ளார்.மேலும் தனது படத்திற்கு பெரும்பாலும், இசை பாடல்கள் எழுதி அசத்தியுள்ள, டி.ஆர், தான் எழுதிய பாடல்கள் இயக்கிய படங்கள், அமைத்த இசைகள் மூலம் தற்போதுவரை ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளார். தற்போது இவர் சினிமாவில் நடிக்கவில்லை என்றாலும் கூட, இவருக்கான ரசிகர்கள் கூட்டம் இன்றும் இருந்துகொண்டு தான் இருக்கிறது. டி.ராஜேந்தர் படங்களில் நீங்கள் கவனிக்காத ஒரு சிறப்பு அம்சம் உள்ளது. அது என்னவென்றால் அவர் தனது படத்திற்கு வைத்த தலைப்புகள் தான். கவிதைத்துவமாக வைத்திருக்கும் தலைப்புகள் ஒவ்வொன்றும், 9 எழுத்துக்களில் அமைந்திருக்கும். ஒரு சில தலைப்புகளை தவிர, 2002-ம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெளியாக காதல் அழிவதில்லை படம் கூட 9 எழுத்துக்களில் தான் அமைந்திருக்கும். அதேபோல் தலைப்பு வித்தியாசம் இல்லாமல் கவிதையுடன் அதே சமயம் கதைக்கு பொருத்தமான தலைப்புகளை மட்டும் தான் டி.ஆர்.இதுவரை டைட்டிலுக்காக பயன்படுத்தியுள்ளார். தங்கை செண்டிமெண்ட், அம்மா செண்டிமெண்ட் என பெண்கள் கவனத்தை ஈர்க்கும் வகையில் திரைக்கதையை அமைத்து, பெண் ரசிகைகளை சம்பாதித்த டி.ஆர், இன்றும் தனது படங்களால், ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளார். இப்போதும் மேடைகளில் அவரின் அடுக்குமொழி பேச்சு வரவேற்பு இருக்கத்தான் செய்கிறது.