சினிமா
கால்களை பிடித்து விடுபவன் உண்மையான ஆண்.. 40 வயதாகும் தொகுப்பாளினி டிடி ஓபன் டாக்

கால்களை பிடித்து விடுபவன் உண்மையான ஆண்.. 40 வயதாகும் தொகுப்பாளினி டிடி ஓபன் டாக்
சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ள பிரபலங்களில் ஒருவர் தொகுப்பாளினி டிடி. தனது சிறு வயதிலேயே நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க ஆரம்பித்த இவருக்கு விஜய் டிவியின் மூலம் மக்கள் மத்தியில் நல்ல பிரபலம் கிடைத்தது.அதே போல் காஃபி வித் டிடி நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தது. இதன்மூலம் முன்னணி தொகுப்பாளினியாகவும் உயர்ந்தார் திவ்யதர்ஷினி. தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த டிடி, கடந்த சில ஆண்டுகளாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதை குறைத்துக்கொண்டார்.உடல்நிலை காரணமாக பெரிய நிகழ்ச்சிகளை மட்டுமே தொகுத்து வழங்கி வருகிறார். மேலும் Youtube சேனலில் பிரபலங்களை பேட்டி எடுத்து வருகிறார். இந்த நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் ஒரு பெண்ணுக்கு எப்படிப்பட்ட ஆண்னை பிடிக்கும் என்பது குறித்து பேசியுள்ளார். இவர் பேசியது தற்போது இணையத்தில் படுவைரலாகி வருகிறது. பலரும் டிடி-ஐ பாராட்டி வருகிறார்கள்.”18 வயதில் உங்களை பார்த்து, ‘யார் வீரமான ஆண்மையுடைய ஆண்’ என நான் கேட்டால், ‘நல்ல உயரமா, பைக்கில் வந்து, காலரா தூக்கி விட்டுகிட்டு ரவுடி மாதிரி இருக்கிற ஒருவனை சொல்வீர்கள். ஆனால், ஒரு கட்டத்திற்கு மேல் யார் ஆண்மையுடைய ஆண் என என்னை கேட்டால், ‘வீட்டிற்கு போகும்போது அங்கு உங்கள் கால்களை பிடித்து விடுபவன் தான் ஆண்மையுடைய ஆண்’. நான் வீட்டிற்கு செல்லும்போது, நான் காஃபி போட்டுட்டேன், அரிசி வெச்சுட்டேன், இப்போ நாள் போய் குளிக்கிறேன், நீ வந்து காய்கறிகள் நறுக்கி வைத்துவிடு, நாம் salad செஞ்சு ஒன்றாக அமர்ந்து டிவி பார்க்கலாம் என்று சொல்பவன் தான் ஆண்மையுடைய ஆண். இப்படி ஒருவன் தனது மனைவிக்கு செய்யும்போது, அவனை சுற்றி உள்ளவர்கள், என்னடா இப்படி பண்ணிட்டு இருக்க என்று சொல்லலாம். ஆனால், அந்த பெண் சொல்லவேண்டியது, மனைவியுடன் கணவன் நடந்து செல்லும்போது மனைவியின் கைகளை பிடித்துக்கொண்டு, Handbag-ஐ சுமந்து செல்பவன்தான் ஆண்மையுடைய ஆண் என்று” என கூறியுள்ளார்.