இலங்கை
குப்பைகாடான பல்லேகலை கிரிக்கெட் மைதானம்

குப்பைகாடான பல்லேகலை கிரிக்கெட் மைதானம்
பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் கடந்த போட்டியின்போது பார்வையாளர்கள் விட்டுச் சென்ற திண்மக்கழிவுகள் மற்றும் பொலித்தீன் கழிவுகள் அகற்றப்படாமல் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
மைதானத்தில் மேலும் சில போட்டிகள் நடைபெறவுள்ளதால் இந்தக் கழிவுகள், போட்டி நிகழ்வுகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் குவிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த 10ஆம் திகதி பங்களாதேஷ் மற்றும் இலங்கை ஆகிய அணிகளுக்கு இடையில் நடைபெற்ற போட்டியைக் காண, சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் மைதானத்துக்கு வருகைதந்திருந்தனர்.
இதன்போது பார்வையாளர்கள் விட்டுச் சென்ற கழிவுப் பொருட்களை அப்புறப்படுத்தும் பொறுப்பு குண்டசாலை பிரதேச சபைக்கு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
எனினும் அவர்கள் அந்த கழிவுகளை இன்னும் முறையாக அகற்றவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.