இலங்கை
குப்பைக் கழிவகற்றும் வாகனத்தில் கூட்டத்திற்குச் சென்ற தவிசாளர்கள்!

குப்பைக் கழிவகற்றும் வாகனத்தில் கூட்டத்திற்குச் சென்ற தவிசாளர்கள்!
மட்டக்களப்பில் பிரதேசசபைக்குச் சொந்தமான குப்பைக் கழிவகற்றும் உழவியந்திரத்தில் தவிசாளர்கள் இருவர் சென்றுள்ள காட்சி தற்போது வெளியாகியுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடி பிரதேசசபை மற்றும் வாழைச்சேனை பிரதேசசபை ஆகிய சபைகளின் தவிசாளர்களே இவ்வாறு குப்பை அகற்றும் வாகனத்தில் சென்றுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தில் சுற்றுச்சூழல் அமைச்சரின் தலைமையிலான மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்று காலை இடம்பெற்றது.
குறித்த கூட்டத்தில் கலந்துகொள்வதற்காகவே செங்கலடி பிரதேசசபை மற்றும் வாழைச்சேனை பிரதேசசபை தவிசாளர்கள் குப்பை அகற்றும் வாகனத்தில் சென்றுள்ளனர்.
செங்கலடி மற்றும் வாழைச்சேனை பிரதேசசபைகளுக்கான வாகனங்கள் இதுவரையில் வழங்காத நிலையில் கழிவகற்றும் உழவியந்திரத்தில் செங்கலடி மற்றும் வாழைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர்கள் கூட்டத்திற்குச் சென்றனர்.
தவிசாளர்கள் இருவரும் கழிவகற்றும் வாகனத்தில் சென்ற காட்சி தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.