இலங்கை
குற்றவாளிகளை நாட்டிற்கு அழைத்து வர வெளிநாடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள சிஐடி அதிகாரிகள்

குற்றவாளிகளை நாட்டிற்கு அழைத்து வர வெளிநாடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள சிஐடி அதிகாரிகள்
வெளிநாடுகளில் தலைமறைவாக வாழ்ந்து வரும் திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்ட பாதாள உலகக் குழு உறுப்பினர்களை கைது செய்யும் நோக்கில் குற்றப் புலனாய்வு அதிகாரிகள் சில நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் குற்றவாளிகளை நாட்டுக்கு அழைத்து வரும் நோக்கில் இந்த அதிகாரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
குருணாகல் பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றின் போது அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கு நாடுகள் உள்ளிட்ட சில நாடுகளில் இந்த குற்றவாளிகள் தங்கியிருப்பதாகவும்
அவர்களை கைது செய்வதற்காக சர்வதேச காவல்துறையின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் சிலர் மலேசியாவில் கைதானதாக அண்மையில்
சமூக ஊடகங்களில் வெளியான செய்தி பிழையானது என அமைச்சர் ஆனந்த விஜேபால மேலும் தெரிவித்துள்ளார்.