Connect with us

இலங்கை

கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்திற்கு எதிர்க்கட்சி படையெடுப்பு!

Published

on

Loading

கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்திற்கு எதிர்க்கட்சி படையெடுப்பு!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உட்பட எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் குழு  இன்று (16) கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்திற்கு படையெடுத்துள்ளனர். 

நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்கவின் வாகனமொன்று தொடர்பான வழக்கு இன்று கோட்டை நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. 

Advertisement

இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க இன்றையதினம் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார். 

இதன் காரணமாக, சுஜீவ சேனசிங்கவிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் நீதிமன்றத்தை நோக்கிப்  படையெடுத்துள்ளனர். 

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, எதிர்க்கட்சி எம்.பிக்களான மனோ கணேசன், தயாசிறி ஜயசேகர, ரஞ்சித் மத்தும பண்டார, லக்ஸ்மன் கிரியெல்ல, மரிக்கார், ஹர்ச டி சில்வா, பழனி திகாம்பரம், முஜிபுர் ரஹ்மான் உள்ளிட்ட பலரும் நீதிமன்றத்திற்கு வருகைத் தந்திருந்ததுடன், 

Advertisement

உதய கம்மன்பில,  கபீர் ஹாசிம் உள்ளிட்ட மேலும் பலரும் சுஜீவ சேனசிங்கவிற்கு ஆதரவு தெரிவித்து நீதிமன்றத்திற்கு வருகைத் தந்திருந்தனர். 

இந்நிலையில், நீதிமன்றத்தில் ஆஜரான முன்னாள் இராஜாங்க அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுஜீவ சேனசிங்கவை இன்று (16) பிணையில் விடுவிக்க கோட்டை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன