இலங்கை
சளிப்பிரச்சினைக்கு கற்பூரம் தேய்த்ததால் பரிதாபமாக உயிரிழந்த 8 மாத குழந்தை

சளிப்பிரச்சினைக்கு கற்பூரம் தேய்த்ததால் பரிதாபமாக உயிரிழந்த 8 மாத குழந்தை
இந்தியாவில் சளியால் பாதிக்கப்பட்ட 8 மாத குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவமொன்று, சென்னையில் இடம்பெற்றுள்ளது.
தைலம் மற்றும் கற்பூரம் தேய்த்தால், சளிப்பிரச்சினை இல்லாமல் போய்விடும் என நினைத்து, அவ்விரண்டையும் சேர்த்துக் குழைத்து, குழந்தையின் மூக்கில் தேய்த்ததால், மூச்சுத் திணறல் ஏற்பட்டு குழந்தை உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் குழந்தை உயிரிழந்ததாக, தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.