சினிமா
சியான் 64க்கு கை கொடுக்கும் பிரபல தயாரிப்பு நிறுவனம்.! மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!

சியான் 64க்கு கை கொடுக்கும் பிரபல தயாரிப்பு நிறுவனம்.! மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சியான் விக்ரம், தற்போது தனது 64வது திரைப்படத்திற்கான திட்டங்களைத் தொடங்கியுள்ளார். இந்தப் புதிய திரைப்படத்தை, ’96’ மற்றும் மெய்யழகன் படங்களுக்குப் பிறகு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற இயக்குநர் பிரேம்குமார் இயக்கவுள்ளார் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன. இதைத் தொடர்ந்து, இயக்குநர் பிரேம்குமார், விக்ரம் நடிக்கவிருக்கும் சியான் 64 குறித்த முக்கிய அப்டேட்டை வெளியிட்டுள்ளார். தனது சமீபத்திய பேட்டியில், விக்ரமிடம் ஒரு திரைக்கதை சொல்லியதாகவும், அவர் அதைப் பெரிதும் விரும்பியதாகவும், தற்போது அந்த ஸ்கிரிப்ட்டை முழுமையாக எழுதிக்கொண்டு இருப்பதாகவும் இயக்குநர் உறுதிப்படுத்தியுள்ளார்.இந்நிலையில், இந்தப் புதிய திரைப்படத்தை ‘வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல்’ நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.விக்ரமின் நடிப்பில் கடந்த சில வருடங்களாக வெளியாகிய படங்கள் அனைத்து ரசிகர்களிடமும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ள நிலையில், பிரேம்குமாருடன் அவரது கூட்டணி தமிழ் சினிமாவுக்கு ஒரு புதிய தரத்தை கொண்டு வரும் என ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.மேலும் சியான் 64 குறித்த மேலதிக தகவல்களுக்கு ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.