இலங்கை
செம்மணியில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றிருக்க வாய்ப்பு!

செம்மணியில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றிருக்க வாய்ப்பு!
புதைகுழி அகழ்வு தொடர்பில் பேராசிரியர் சோமதேவா அறிக்கை
அரியாலை – சித்துப்பாத்தி (செம்மணி) மயானத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள மனிதப் புதைகுழியில், மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றிருக்கச் சாத்தியங்கள் அதிகமுள்ளன – இவ்வாறு பேராசிரியர் ராஜ்சோம தேவ அறிக்கையிட்டுள்ளார்.
செம்மணிப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் ஜூலை மாதம் 10ஆம் திகதியுடன் முடிவுக்கு வந்தன. இதன்போது, இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் தொடர்பில் நீதிமன்றத்தில் அறிக்கையிடுமாறு, துறைசார் நிபுணரும், பேராசிரியருமான ராஜ்சோமதேவாவுக்கு நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவுக்கு அமைய பேராசிரியர் ராஜ்சோமதேவ நீதிமன்றத்தில் தனது அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளார். அந்த அறிக்கையில் மேலும் உள்ளதாவது:-
செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை 65 என்புத்தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. இந்தப் புதைகுழியில் பாரம்பரிய அல்லது மரபு ரீதியான வகையில் சடலங்கள் அடக்கம் செய்யப்படவில்லை என்பது உறுதியாகத் தெரியவருகின்றது. இதன்படி, குற்றச்சம்பவங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றிருக்கலாம் என்பது இந்த அடக்க முறைமைகளில் இருந்து தெரியவருகின்றது. மேலதிக தகவல்களுக்காக அகழ்வுப் பணிகள் தொடரப்பட வேண்டும் – என்றுள்ளது.