இலங்கை
ஜூலை 21இல் அகழ்வு; ஓகஸ்ட் 6இல் வழக்கு!

ஜூலை 21இல் அகழ்வு; ஓகஸ்ட் 6இல் வழக்கு!
செம்மணி மனிதப் புதைகுழி மீதான மூன்றாம் கூட்ட அகழ்வுப் பணிகள் எதிர்வரும் 21ஆம் திகதி இடம்பெறும் என்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் நீதிவான் ஏ. ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் நேற்று விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே, செம்மணிப் புதைகுழி தொடர்பான மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் எதிர்வரும் 21ஆம் திகதி இடம்பெறும் என்றும், இது தொடர்பான வழக்கு ஓகஸ்ட் மாதம் 6ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.