இலங்கை
டீசலில் மண்ணெண்ணெய் கலந்த சாரதி ; மடக்கிப் பிடித்த பொலிஸார்

டீசலில் மண்ணெண்ணெய் கலந்த சாரதி ; மடக்கிப் பிடித்த பொலிஸார்
டீசல் எரிபொருளுடன் மண்ணெண்ணெய் கலந்து பாரவூர்தி செலுத்திய குற்றச்சாட்டின் பேரில் ஓட்டுநர் ஒருவர் கைதுசெய்யப்பட்டார்.
வலப்பனையிலிருந்து ஹட்டனுக்கு மணல் கொண்டு செல்லும் சில பாரவூர்திகள் டீசலுடன் மண்ணெண்ணெய் கலந்து செல்வதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய லிந்துலை பொலிஸார் விசேட சுற்றிவளைப்பை முன்னெடுத்தனர்.
இதன்போதே பாரவூர்தி ஒன்றின் ஓட்டுநர் கைதாகியுள்ளார்.
பாரவூர்தியிலிருந்து எடுக்கப்பட்ட எரிபொருள் மாதிரிகள் இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனத்தின் ஆய்வகத்திற்கு அனுப்பப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
கிடைக்கப்பெறும் அறிக்கையைக் கொண்டு, சந்தேக நபருக்கு எதிராக நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என லிந்துலை பொலிஸ் போக்குவரத்துப் பிரிவினர் தெரிவிக்கின்றனர்.
இதனிடையே கைதாகிய ஓட்டுநர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.