சினிமா
‘தலைவன் தலைவி’ படத்தின் ட்ரெய்லர் எப்போது தெரியுமா.? படக்குழு வெளியிட்ட அப்டேட்.!

‘தலைவன் தலைவி’ படத்தின் ட்ரெய்லர் எப்போது தெரியுமா.? படக்குழு வெளியிட்ட அப்டேட்.!
தமிழ் சினிமாவில் எப்போதுமே தனித்துவமான கதைகளை இயக்கும் இயக்குநர் பாண்டிராஜ், தற்போது விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் ஆகியோரைக் கொண்டு இயக்கியுள்ள புதிய திரைப்படம் தான் ‘தலைவன் தலைவி’.இத்திரைப்படம் ஒரு குடும்பப் பின்னணியில் இருக்கும், உணர்ச்சி, காதல் மற்றும் எதிர்பாராத வாழ்க்கை சிக்கல்கள் என்பன நிரம்பிய கதையாக உருவாகியுள்ளது. தற்போது இந்த படத்தின் ட்ரெய்லர் நாளை (ஜூலை 17, 2025) வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.நாளை வெளிவரவுள்ள ‘தலைவன் தலைவி’ ட்ரெய்லர் தொடர்பான அறிவிப்பு இன்று படக்குழுவின் சோசியல் மீடியா பக்கங்களில் வெளியிடப்பட்டுள்ளது. அதில்,” தலைவன் ready. தலைவி on fire. ட்ரெய்லர் from tomorrow..” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.