Connect with us

இலங்கை

தவிசாளரின் இலக்கத்தகடு இல்லாத உழவு வாகனம் ; வெளியான பரபரப்பு தகவல்

Published

on

Loading

தவிசாளரின் இலக்கத்தகடு இல்லாத உழவு வாகனம் ; வெளியான பரபரப்பு தகவல்

மட்டக்களப்பில் புதன்கிழமை (16) நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பங்கேற்க, வாழைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் சுந்தரலிங்கம் சுதாகரன் இலக்கத்தகடு இல்லாத குப்பை ஏற்றும் உழவு இயந்திர வாகனத்தில் வந்ததாக வெளியாகிய தகவல் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வாகனம் வாழைச்சேனையிலிருந்து மட்டக்களப்புவரை வீதியால் கடந்துள்ளது.

Advertisement

இது வழமையாக நகரில் குப்பை ஏற்றும் வாகனமாக பயன்படுத்தப்படும் ஒரு உழவு இயந்திரம் என்பதும், சட்டப்படி வீதிகளில் பயணிக்க அதற்கான பதிவு இலக்கம் (number plate) இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், “இந்த வாகனம் ஏற்கனவே பல்வேறு இடங்களில் இலக்கத்தகடு இல்லாமல் குப்பைகள் ஏற்றிச் சென்றதா?” என்ற கேள்வி எழுந்துள்ளது.
அத்துடன், சட்ட ஒழுங்கு மற்றும் போக்குவரத்து விதிகள் அனைவருக்கும் சமமா? என்பதும் ஒரு பொதுமக்கள் கேள்வியாக எழுந்திருக்கிறது.

சட்டம் ஒழுங்கு வலியுறுத்தப்படும் மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்திற்கு செல்லும் தருணத்தில் கூட இத்தகைய பிழைகள் நடைபெறுவது கவலைக்கிடமானது.

Advertisement

இங்கு ஒரு விடயத்தில் தீவிரமாக கவனம் செலுத்தும்போது, இவ்வாறான அடிப்படை விடயங்களும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதல்லவா?  என தகவல் வெளியாகியுள்ளது. 

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன