இலங்கை
திருகோணமலை நகர் பகுதியில் கடைகளுக்கு திடீர் சுற்றிவளைப்பு!

திருகோணமலை நகர் பகுதியில் கடைகளுக்கு திடீர் சுற்றிவளைப்பு!
திருகோணமலை நகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 33 வியாபார நிலையங்களில் திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை அதிகாரிகளின் வழிநடத்தலில் இச் சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி, மட்டிக்களி, மட்கோ நீதிமன்ற வீதி, தபால் கந்தோர் வீதி போன்ற பிரதேசங்களில் உள்ள 33 வியாபார நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில்,
சுகாதார நடவடிக்கைகளை பேணாத 15 கடைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் மருத்துவ அதிகாரி மேலும் தெரிவித்தார்.