இலங்கை
தேயிலை, தேங்காய் ஏற்றுமதி அதிகரிப்பு!

தேயிலை, தேங்காய் ஏற்றுமதி அதிகரிப்பு!
இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் தேயிலை மற்றும் தேங்காய் ஆகியவற்றின் ஏற்றுமதி வருவாய் கணிசமாக அதிகரித்துள்ளது.
அதன்படி, கடந்த ஆண்டின் (2024) முதல் ஐந்து மாதங்களில் 565.3மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்த தேயிலை ஏற்றுமதி வருவாய், இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் 7.9 சதவீதம் அதிகரித்து 610.1 மில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது. மேலும், தேங்காய் ஏற்றுமதி வருவாய் கடந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் 158.2 மில்லியன் அமெரிக்க டொலராக இருந்த நிலையில், இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் 25.3 சதவீதம் அதிகரித்து 198.1 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது. இந்த ஐந்து மாதங்களில் கறுப்புத் தானிய ஏற்றுமதிவருவாய் 55.8 சதவீதம் அதிகரித்து 171.1மில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.