Connect with us

இலங்கை

நச்சு பாம்பு தீண்டி 4 வயது சிறுவன் பலி!

Published

on

Loading

நச்சு பாம்பு தீண்டி 4 வயது சிறுவன் பலி!

ஹங்குரன்கெத்த, உடகலஉட பிரதேசத்தில் நாகப்பாம்பு தீண்டியதால் 4 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சிறுவனின் பெற்றோர் வயலில் வேலை செய்துகொண்டிருந்த வேளையில், அருகில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவனை நாகப்பாம்பு தீண்டியுள்ளது.

Advertisement

இதனால் சிறுவனின் காலில் ஏற்பட்ட காயத்துக்கு உடனடியாக கைமருத்துவம் செய்யப்பட்டது. 

எனினும், அது பலனளிக்காத காரணத்தால் பெற்றோர் ரிகிலகஸ்கட மருத்துவமனையில் சிறுவனை அனுமதித்துள்ளனர். 

எனினும், சிகிச்சை பலனின்றி சிறுவன் மருத்துவமனையில்  உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

சிறுவனுக்கு அளிக்கப்பட்ட கைமருத்துவத்தின்போது விஷம் மேல் ஏறாமல் இருப்பதற்காக, இறுக்கமாக கட்டு போடப்பட்ட காரணத்தினால் இரத்த ஓட்டம் தடைப்பட்டிருக்கலாம் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

உரிய வேளையில் சரியான முறையில் சிகிச்சை வழங்கப்பட்டிருந்தால் சிறுவனைக் காப்பாற்றியிருக்க முடியும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன