இலங்கை
பங்குச் சந்தை அதி வளர்ச்சி

பங்குச் சந்தை அதி வளர்ச்சி
கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண், வரலாற்றில் முதன்முறையாக நேற்றுமுன்தினம் 19,000 புள்ளிகளைக் கடந்ததாக பங்குச் சந்தை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த வளர்ச்சியின் மூலம் முதலீட்டாளர்களின் நம்பிக்கையும் சந்தையின் புள்ளிவிவர ரீதியான நிலைமையும் வலுவடைந்துள்ளதாக பங்குச்சந்தை வட்டாரங்கள் மதிப்பீடு செய்துள்ளன. நேற்றைய வர்த்தக நாளில் இதுவரை பதிவான மொத்த வர்த்தகப் புரள்வு ரூ.1.29 பில்லியனைத் தாண்டியுள்ளதாகவும் கொழும்பு பங்குச்சந்தை மேலும் தெரிவித்துள்ளது.