சினிமா
படப்பிடிப்பில் நடந்த ஸ்டண்ட் விபத்து குறித்தது பைல்வானின் கேள்விகள்!வைரலாகும் நேர்காணல்!

படப்பிடிப்பில் நடந்த ஸ்டண்ட் விபத்து குறித்தது பைல்வானின் கேள்விகள்!வைரலாகும் நேர்காணல்!
இயக்குநர் பா. ரஞ்சித்தின் புதிய படத்தின் ஷூட்டிங்கில் நடந்த ஸ்டண்ட் விபத்து, தமிழ் சினிமாவில் பாதுகாப்பு முறைமை மீதான கடும் விமர்சனங்களை கிளப்பியுள்ளது. பிரபல ஸ்டண்ட் இயக்குநர் மோகன்ராஜ், தற்காலிகமாக மாற்றியமைக்கப்பட்ட காரில் சாகச காட்சி எடுத்துக்கொள்ளும் போது, திடீர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.படக்குழுவினரின் தகவலின்படி, காரை வேகமாக ஓடவைத்து, அது பின் உருண்டு விழும் தருணத்தில் கதவுகள் தானாக திறந்து, காட்சியாளர் வெளியே பாய வேண்டும். ஆனால் கதவு திறக்காமல் இருந்ததால், அவர் காருக்குள் சிக்கி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.பிரபல பழம்பெரும் நடிகரும் பத்திரிகையாளருமான பைல்வான் ரங்கநாதன், இந்த சம்பவம் தொடர்பாக, “இந்த அளவுக்கு ஆபத்தான காட்சியில், ஆம்புலன்ஸ் எங்கே? டாக்டர்கள், நர்ஸ்கள் யாரும் இல்லை. இது சாதாரண குற்றம் இல்லை,” எனக் கடுமையாக விமர்சித்தார்.படத்திற்காக பயன்படுத்தப்பட்ட காருக்கு modify செய்யப்பட்டிருந்தபோதும், அதன் பத்திர பதிவுகள் மற்றும் RTO அனுமதி எதுவும் பெறப்படவில்லை எனத் தகவல். இது ஒரு பெரிய பட்ஜெட் படம் என்ற உண்மையை வைத்துப் பார்த்தால், இந்த தவறுகள் கேள்விக்குரியவையாக உள்ளன.தமிழ்நாடு திரைப்பட தொழிலாளர் சங்கமான பெப்சி, ஆபத்தான காட்சிகளில் ஆம்புலன்ஸ், மருத்துவர்கள், மற்றும் நர்ஸ்கள் கட்டாயம் இருக்க வேண்டும் என்ற உத்தரவை ஏற்கனவே வெளியிட்டிருந்தது. ஆனால் இந்த படப்பிடிப்பு நடத்திய இடமான நாகப்பட்டினத்தில், அருகிலுள்ள மருத்துவமனை 30 கிலோமீட்டர் தொலைவில் இருப்பதால், விபத்துக்குள்ளானவர் உடனடியாக சிகிச்சை பெற முடியாமல் போனதாக தெரிவிக்கப்படுகிறது.இந்நிலையில் இயக்குநர் பா. ரஞ்சித் உட்பட மூன்று பேர்மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இன்னும் வரை ரஞ்சித் எந்தவொரு பதிலும் அளிக்கவில்லை. மரணத்திற்கான மருத்துவ அறிக்கை வரவில்லை என்பதாலும், சம்பவத்தின் காரணங்களை முழுமையாக உறுதி செய்ய முடியவில்லை.“இந்த அளவுக்கு ஆபத்தான காட்சிகளை படத்தில் இட வேண்டும் என்கிற தேவையா? ஸ்டண்ட் மாஸ்டரே இந்த காட்சிக்கு வந்தது, பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாதது ஏன்?” எனும் கேள்விகள் திரையுலகிலும், ரசிகர்களிடையிலும் எழுந்துள்ளன. மேலும் இந்த சம்பவம், ஸ்டண்ட் கலைஞர்களின் பாதுகாப்பு, காப்பீட்டு வசதிகள், தொழில்நுட்ப அடிப்படைகள் பற்றிய சட்டமுறை சீர்திருத்தம் தேவை என்பதையும் முவைத்து இருந்தார் பைல்வான் ரங்கநாதன்.