சினிமா
பல ஃபிளாப் படங்கள்!! இப்போ ரூ. 150 கோடி சம்பளம்..நடிகர் காட்டில் மழை தான்…

பல ஃபிளாப் படங்கள்!! இப்போ ரூ. 150 கோடி சம்பளம்..நடிகர் காட்டில் மழை தான்…
பாலிவுட் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் ரன்பீர் கபூர், தற்போது ராமாயனா படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இரு பாகங்களாக உருவாகவுள்ள இப்படம் 4 ஆயிரம் கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி வரும் இப்படத்தின் வீடியோ இணையத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.2007ல் சாவரியா படத்தின் மூலம் அறிமுகமாகிய ரன்பீர் கபூருக்கு மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்தது. முதல் படமே தோல்வியை சந்தித்த நிலையில் அவரின் சினிமா வாழ்க்கை முடிந்துபோகும் என்று பலரும் எதிர்ப்பார்த்தனர்.அதையெல்லாம் பொருட்படுத்தாமல் நடித்து வந்த ரன்பீருக்கு தொடர் தோல்வி படமாக அமைந்தது. இதனையடுத்து பர்பி, சஞ்சு போன்ற படங்கள் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது.சமீபத்தில் அவர் நடித்து வெளியாகி பல விமர்சனங்களை பெற்ற அனிமல் படம் 800 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தது. ஒரு படத்திற்காக சுமார் 150 கோடி ரூபாய் சம்பளமாக வாங்கி வருகிறாராம்.அவருடைய சொத்து மதிப்பு ரூ. 395 கோடியாம். மும்பையில் 200 கோடி ரூபாய் மதிப்பிளான பங்களாவை வைத்திருக்கிறார். பல தோல்விகளை சந்தித்த ரன்பீர் கபூர் பல பிராண்ட்களுக்கு விளம்பரத்தூதுவராக இருந்து சம்பாதித்து வருகிறார்.