Connect with us

சினிமா

பி.சரோஜா தேவி குறித்து இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரின் உருக்கமான பதிவு!வைரலாகும் நினைவுகள்!

Published

on

Loading

பி.சரோஜா தேவி குறித்து இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரின் உருக்கமான பதிவு!வைரலாகும் நினைவுகள்!

1960-70களில் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்த மூத்த நடிகை பி.சரோஜா தேவி உடல்நலக்குறைவால் கடந்த ஜூலை 14 அன்று காலமானார்.  86ஆவது வயதில் அவர் இறந்தார். அவரது கண்கள் தானமாக வழங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த ஊரான தஷாவராவில், அரசு மரியாதையுடன் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. திரைத்துறையைச் சேர்ந்தவர்களும், அரசியல்வாதிகளும் உள்ளிட்ட பலர் அவரது இறுதி அஞ்சலியில் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.இந்த நிலையில் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார்  நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டு போசும் போது கூறிய விடயம் ரசிகர்கள் மத்தியில்  நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.  “ஆதவன் படம் இயக்கும் போது அவர் மிகுந்த ஒழுக்கத்துடன் செயல்பட்டார். ‘எப்போதும் மேக்-அப்புடன் மட்டுமே வெளியில் வர வேண்டும்’ என்று எம்.ஜி.ஆர் சொல்லியதையடுத்து, அவரும் அதையே பின்பற்றினார். கடைசியாக நடிகர் அர்ஜுனின் மகளின் திருமண விழாவில் அவரைச் சந்தித்தேன். உடல்நிலை சரியில்லாவிட்டாலும்  விழாவில் கலந்து கொண்டார். அவரது மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது.” மேலும் இவர் கூறிய விடயம்  ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன