இலங்கை
புதைகுழியில் மீட்கப்பட்டது சிறார்களின் காலணியே!

புதைகுழியில் மீட்கப்பட்டது சிறார்களின் காலணியே!
செம்மணிப் புதைகுழியில் இருந்து காலணியொன்று மீட்கப்பட்டிருந்த நிலையில், அது 6ஆம் இலக்க அளவிலான காலணி என்றும் அது பெரும்பாலும் சிறார்களுடையதாக இருக்கலாம். என்றும் அறிக்கையிடப்பட்டுள்ளது. செம்மணிப் புதைகுழியில் மீட்கப்பட்ட சான்றுப்பொருள்கள் தொடர்பான ‘கூராய்வு அறிக்கை’ பேராசிரியர் ராஜ் சோமதேவவால் நீதிமன்றத்துக்குச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையிலேயே, புதைகுழியில் மீட்கப்பட்ட காலணி, 6ஆம் இலக்க அளவுடையது என்றும், அதில் 39 ரூபா 90 சதம் என்று விலை குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.