சினிமா
மகிழ்ச்சி செய்தியை வெளியிட்ட கியாரா-சித்தார்த் ஜோடி..!வைரலாகும் பதிவு..!

மகிழ்ச்சி செய்தியை வெளியிட்ட கியாரா-சித்தார்த் ஜோடி..!வைரலாகும் பதிவு..!
பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கியாரா அத்வானி. எம்.எஸ். தோனி வாழ்க்கையை மையமாக கொண்ட தோனி: தி அன்டோல்ட் ஸ்டோரி திரைப்படத்தின் மூலம் திரையுலகில் பிரபலமான இவர், தொடர்ந்து பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். தென்னிந்திய திரையுலகிலும், ராம் சரணுடன் இணைந்து நடித்த வினய் விதேயே ராமா படத்தின் மூலம் அறிமுகமானார்.கடந்த ஆண்டு, பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் உருவான கேம் சேஞ்சர் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்த கியாரா, தற்போது வார் 2 மற்றும் டாக்சிக் என இரண்டு முக்கியமான படங்களில் நடித்து வருகிறார்.தன்னுடைய நீண்ட நாள் காதலரான பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்ஹோற்றாவை கடந்த 2023 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில், இப்பொழுது மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. நடிகை கியாரா அத்வானிக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த செய்தி வெளியாகியவுடன், ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் தங்கள் வாழ்த்துக்களை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகிறனர் .