இலங்கை
மாதுளைப்பழ பிரியர்களா நீங்கள்? சாப்பிடும் போது தவறியும் இதை மட்டும் செய்யாதீர்கள்

மாதுளைப்பழ பிரியர்களா நீங்கள்? சாப்பிடும் போது தவறியும் இதை மட்டும் செய்யாதீர்கள்
மாதுளை பழம் மிகவும் சுவையான, சத்துக்கள் நிறைந்த பழம் தான். தினமும் சிறிதளவு சாப்பிடுவது நல்லதுதான். ஹீமோகுளோபின் அதிகரிப்பது முதல் ரத்தத்தை சுத்தப்படுத்துவது வரை நிறைய நன்மைகளை தரும். ஆனால் அதை நீங்கள் தப்பா தான் சாப்பிடறீங்கனு உங்களுக்கு தெரியுமா? மாதுளை பழம் சாப்பிடும்போது பொதுவாக செய்யும் 5 தவறுகள் என்ன? அதை ஏன் செய்யக்கூடாது? என்பது பற்றி நாம் இங்கு பார்க்கலாம்.
நிறைய பேர் மாதுளை பழத்தை நறுக்கும்போது ஒழுங்காக நறுக்கத் தெரியாமல் அதன் சாறு முழுக்க கீழே சிந்திவிடுவார்கள். அதிலேயே பாதி சத்துக்கள் வீணாகி போய்விடும். அதோடு பழத்தை மென்று விட்டு அதன் விதைகளை தூக்கி கீழே வீசி விடுவார்கள். அப்படி செய்ய கூடாது.
மாதுளை பழத்தை பொறுத்தவரை அதன் விதைகளையும் சேர்த்து தான் சாப்பிட வேண்டும். அதில்தான் நிறைய ஆண்டி அக்கிட்சிட்டுங்கள் இருக்கின்றன.
குறிப்பாக குழந்தைகளுக்கு கொடுக்கும்போது அவர்களுக்கு விதைகளோடு சாப்பிட கற்றுக் கொடுங்கள். பெரும்பாலான குழந்தைகள் விதைகளை துப்பி விடுகிறார்கள்.
மாதுளை சாப்பிடும்போது செய்யும் இரண்டாவது தவறு என்னவென்றால் மாதுளையின் மேல் பகுதி தோலை உரித்தவுடன் அதன் உட்புறத்தில் இருக்கும் மெலிதான வெள்ளை நிற தோல்களை நீக்கிவிட்டு மாதுளையின் முத்துக்களை மட்டும் சாப்பிடுவார்கள். அது மிக மிகத் தவறு.
மாதுளையின் உட்புறத்தில் இருக்கும் மெல்லிய தோலில் உள்ள துவர்ப்புத் தன்மை தான் அந்த பழத்தின் ஒட்டுமொத்த பயன்களையுமே தாங்கி இருக்கிறது. குறிப்பாக அந்த பகுதியில் தான் நார்ச்சத்து இருக்கிறது. அது செரிமான ஆற்றலை மேம்படுத்த உதவி செய்யும். அதை நீக்கிவிட்டால் அதிலுள்ள நார்ச்சத்துக்கள் முழுமையாக நீங்கிவிடும்.
மாதுளை பழம் மட்டுமல்ல எந்த வகை பழமாக இருந்தாலும் அது உடலுக்கு நல்லது என்பதற்காக நிறைய சாப்பிடக் கூடாது. ஏனென்றால் பழங்களில் இயற்கையாகவே சர்க்கரை இருக்கும். அது ரத்தத்தின் சர்க்கரை அளவை அதிகரிக்கச் செய்து விடும்.
குறிப்பாக மாதுளை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் செரிமானக் கோளாறுகள் ஏற்படலாம். அதிலும் சிலருக்கு குடல் சென்சிடிவிட்டி அதிகமாக இருக்கும். அவர்களுக்கு இந்த அஜீரணக் கோளாறு சார்ந்த பிரச்சினைகள் ஏற்படும்.
மற்ற பழங்களையாவது நறுக்குவதற்கு முன்போ பின்போ கழுவிவிட்டு சாப்பிடுவோம். ஆனால் நன்கு யோசித்துப் பாருங்கள். மாதுளை பழத்தை நாம் கழுவுவதே கிடையாது.
மாதுளை முத்துக்கள் உள்ளுக்குள் தானே இருக்கிறது என்று உரித்து அப்படியே சாப்பிடுகிறோம். அப்படி செய்யக்கூடாது.
மாதுளை பழத்தின் தோலில் நிறைய பாக்டீரியாக்கள் இருக்கும். அதேபோல பழங்களில் நிறைய பூச்சிக்கொல்லிகள் தெளித்து இருப்பார்கள்.
அதனால் மாதுளை வெட்டுவதற்கு முன் பழத்தை நன்கு கழுவிவிட்டு தான் நறுக்க வேண்டும்.