இலங்கை
மீட்கப்பட்ட சான்றுகள் பெண்களுடையவையே

மீட்கப்பட்ட சான்றுகள் பெண்களுடையவையே
செம்மணி மனிதப் புதைகுழியில், நீலநிறப் எடுக்கப்பட்ட பையுடன் அகழ்ந்து எடுக்கப்பட்ட மனித என்புத்தொகுதியுடன் மீட்கப்பட்ட சான்றுப்பொருள்கள் பல பெண்களுடையவை என்று பேராசிரியர் ராஜ்சோமதேவ குறிப்பிட்டுள்ளார். நீலநிறப்பையுடன் அகழ்ந்து எடுக்கப்பட்ட மனித என்புத்தொகுதி, மற்றும் அதனுடன் மீட்கப்பட்ட சான்றுப் பொருள்களின் கூராய்வு அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு பேராசிரியர் ராஜ்சோமதேவவுக்கு நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா பிரத்தியேகக் கட்டளை பிறப்பித்திருந்தார்.
‘எஸ்-25’ என்று அடையாளப்படுத்தப்பட்ட அந்த மனித என்புத்தொகுதி மற்றும் அதனுடன் இணைந்த சான்றுப் பொருள்களுடன் தொடர்புடைய அறிக்கையிலேயே பேராசிரியர் ராஜ்சோமதேவ இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்பேசும் சமூகத்தைச் சேர்ந்த பெண்களுடையவை என்று கருதக்கூடிய இரண்டு காற்சங்கிலிகள், உடைகள், உடைகளுக்கு மேலதிகமாக சில துணிகள், 8 வளையல்கள் (அவற்றில் 4 பிளாஸ்ரிக் வளையல்கள், 4 உலோகக் கூறுகளுடனான வளையல்கள்) என்பனவும் இதன்போது மீட்கப்பட்டன.
இதேவேளை, உள்ளாடைகள் எவையும் அவதானிக்கப்படவில்லை என்று பேராசிரியார் ராஜ்சோமதேவ மேலும் குறிப்பிட்டுள்ளார் .