இலங்கை
முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு பொலிஸார் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு பொலிஸார் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு
சாரதியைத் தாக்கி முச்சக்கரவண்டியொன்றைத் திருடிய சம்பவம் தொடர்பில் மொரகஹதென்ன பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இதுபோன்ற கொள்ளை சம்பவங்கள் அவ்வப்போது நடப்பதாகவும், வாடகைக்கு எடுக்கப்பட்ட முச்சக்கரவண்டிகளின் சாரதிகள் இரவில் கவனமாக பயணம் மேற்கொள்ள வேண்டும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திருடிச் சென்ற குழுவினர் சாரதியிடமிருந்து 11,000 ரூபா பணம், இரண்டு கையடக்கத்தொலைபேசிகள் மற்றும் முச்சக்கரவண்டியின் ஆவணங்களையும் எடுத்துச்சென்றுள்ளனர்.
கொட்டாவ பகுதியிலிருந்து இரவு 9 மணியளவில் குழந்தையுடன் வந்த பெண்ணும் இரு ஆண்களும் முச்சக்கரவண்டியில் ஏறி, தலகல பகுதிக்குச் செல்லுமாறு கூறியுள்ளனர்.
முச்சக்கரவண்டியில் குறைந்த வெளிச்சம் உள்ள வீதியில் பயணித்தபோது, பின்னால் இருந்து வந்த ஒருவர் முச்சக்கரவண்டி சாரதியின் கண்களை தனது கைகளால் மறைக்க முயன்றதாகக் கூறப்படுகிறது.
பின்னர் உடனடியாக, சாரதியின் கண்களில் மிளகாய் தூளால் தாக்கி சாரதியை வாகனத்திலிருந்து தள்ளிவிட்டதாக முச்சக்கரவண்டி சாரதி தெரிவித்தார்.
இச்சம்பவம் குறித்து மொரகஹதென்ன பொலிஸ் நிலைய அதிகாரிகள் விசாரணையைத் ஆரம்பித்துள்ளனர்.
இதற்கமைய, இச்சம்பவம் குறித்து பொலிஸார் தெரிவித்துள்ளாவது,
இதுபோன்ற கொள்ளை சம்பவங்கள் அவ்வப்போது நடப்பதாகவும், வாடகைக்கு எடுக்கப்பட்ட முச்சக்கரவண்டிகளின் சாரதிகள் இரவில் கவனமாக பயணம் மேற்கொள்ள வேண்டும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.