சினிமா
முடிவிற்கு வந்த “Stranger Things” வெப்தொடர்.! டீசர் வெளியீட்டுத் தேதியை அறிவித்த படக்குழு

முடிவிற்கு வந்த “Stranger Things” வெப்தொடர்.! டீசர் வெளியீட்டுத் தேதியை அறிவித்த படக்குழு
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் தொடங்கப்பட்ட ஒரு சிறிய இளைஞர்கள் குழுவில் நடக்கும் பயணத்தைப் பற்றிய சீரிஸ் தான் “Stranger Things”. 2016-ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த முதல் சீசனிலேயே ரசிகர்களின் இதயங்களை கவர்ந்து போன இந்த தொடர், சைக்கலாஜிக்கல் ஹாரர் எனப் பல அம்சங்கள் கலந்த ஒரு மாஸ்டர் பீஸ். இதற்கு பிறகு தொடர்ந்து வந்த ஒவ்வொரு சீசனும் தீவிர எதிர்பார்ப்பையும், பிரமாண்ட வரவேற்பையும் பெற்றது.இப்போது, அதன் கடைசி சீசனுக்கான வெளியீட்டு திட்டம் வெளியாகியுள்ளது. அதன்படி, முதல் 4 எபிசொட்டுகளும் நவம்பர் 26, அடுத்த 3 எபிசொட்டுகளும் டிசம்பர் 25, இறுதி எபிசொட் டிசம்பர் 31 வெளியாகவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. Stranger Things தொடரின் முக்கிய ஹைலைட் என்றால் அது கதையின் பரிணாமம் மற்றும் கதாபாத்திர வளர்ச்சி. பிள்ளைகள் என்று தொடங்கிய கதாநாயகர்கள் இன்று வழிப்போக்கு மாற்றங்கள், காதல், துரோகங்கள் என மனதில் பதிந்த பாத்திரங்களாக வளர்ந்துள்ளனர். அத்தகைய வெப்தொடரின் கடைசி சீசனின் டீசர் இன்று நெட்பிளிக்ஸில் வெளியாகிறது.