பொழுதுபோக்கு
முத்து படத்தில் நடிக்க என்னை கேட்டாங்க; ரஜினியுடன் ஜோடி சேராத நடிகை சொன்ன தகவல்: லிஸ்ட் பெருசா போகுதே!

முத்து படத்தில் நடிக்க என்னை கேட்டாங்க; ரஜினியுடன் ஜோடி சேராத நடிகை சொன்ன தகவல்: லிஸ்ட் பெருசா போகுதே!
ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி பெரிய வெற்றிப்படமாக அமைந்த முத்து திரைப்படத்தில் மீனா நாயகியாக நடித்திருந்த நிலையில், இந்த படத்தில் நாகியாக நடிக்க மீனாவுக்கு முன்பு பல நடிகைகள் கேட்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் தற்போது நடிகை சுகன்யா ஒரு தகவலை பகிர்ந்துள்ளார்.1975-ம் ஆண்டு கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான அபூர்வ ராகங்கள் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் ரஜினிகாந்த். அதனைத் தொடர்ந்து பல வெற்றிப்படங்களை கொடுத்த அவர், ஒரு கட்டத்தில் சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன், முன்னணி நடிகராக வலம் வரும் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 1995-ம் ஆண்டு வெளியான படம் முத்து. மலையாளத்தில் பிரியதர்ஷன் இயக்கத்தில் கடந்த 1994-ம் ஆண்டு வெளியான படம் ‘தென்மாவின் கொம்பேத் படத்தின் ரீமேக்தான் முத்து.மோகன்லால், நெடுமுடி வேணு, ஷோபனா ஆகியோர் நடித்திருந்த இந்த படத்திற்கு கே.வி.ஆனந்த் ஒளிப்பதிவு செய்திருந்தார். மலையாளத்தில் பெரிய வெற்றிப்படமாக அமைந்த இந்த படத்தை தமிழில் ரஜினிகாந்த் நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக அன்புள்ள ரஜினிகாந்த், எங்கேயே கேட்ட குரல் உள்ளிட்ட அவரின் மகளாக நடித்திருந்த நடிகை மீனா நடித்திருந்தார். இந்த படத்தில் இருவருக்கும் இடையேயான மோதல், காதல், ரொமான்ஸ் காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.அதே சமயம் இந்த படத்தில் முதலில் நாயகியாக நடிக்க மீனா தேர்வு செய்யப்படவில்லை என்பது பலரும் அறியாத ஒரு தகவல். ஒருமுறை படப்பிடிப்பை முடித்துவிட்டு கோவை விமான நிலையம் வந்த நடிகை சுகன்யா, கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் அவரது படக்குழுவினரை சந்தித்து பேசியுள்ளார். அப்போது ரவிக்குமார் நீங்கள் என்னிடம் பேச வேண்டாம் என்று கூறியுள்ளார். இதை கேட்ட சுகன்யா ஏன் என்னாச்சு என்று கேட்க, என் படம் எதிலும் நீங்க நடிக்கமாட்டிறீங்க என்று கூறியுள்ளார்.இதை கேட்ட சுகன்யா, எந்த படம் என்று கேட்க அவர் முத்து என்று கூறியுள்ளர். முத்து படமா? என்ன விளையாடுறீங்களா என்று சுகன்யா கேட்க, நிஜமாகவே நான் உங்களை முத்து படத்தில் நடிக்க கேட்டேன் என்று ரவிக்குமார் கூறியுள்ளார். அதற்கு சுகன்யா இது தொடர்பான எனக்கு எந்த போன்காஸ்சும் வரவில்லை. வந்திருந்தால் இந்த படம் கட்டாயம் பண்ணிருப்பேன் 3 படம் ஏற்கனவே தவறவிட்டுவிட்டேன் என்று கூறியுள்ளார் சுகன்யா. இதுவரை தமிழில் 50 படங்களுக்கு மேல் நடித்துள்ள சுகன்யா ஒரு படத்தில் கூட ரஜினிகாந்துடன இணைந்து நடித்ததில்லை.அதேபோல் முத்து படத்தில் மீனா கேரக்டரில் நடிக்க தன்னை அழைத்த்தாக நடிகை மதுவந்தி ஒரு பேட்டியில் கூறியிருந்த நிலையில், சின்னத்திரையில் பிரபலமான தொகுப்பாளினியாக வலம் வந்த பெப்சி உமாவை மீனா கேரக்டரில் நடிக்க, ரஜினிகாந்தே நேரடியாக கேட்டதாகவும் அதற்கு அவர் மறுத்துவிட்டதாகவும் தகவல்கள் உள்ளது. அந்த வகையில் மீனா நடித்த ரங்கநாயகி கேரக்டரில், நடிக்க சுகன்யாவும் மிஸ் செய்துள்ளார்.