இலங்கை
யாழில் சிறப்பாக இடம்பெற்ற “உறைய மறுக்கும் காலம்” நூல் வெளியீடு!

யாழில் சிறப்பாக இடம்பெற்ற “உறைய மறுக்கும் காலம்” நூல் வெளியீடு!
புலம்பெயர்ந்து கனடாவில் வாழும் கவிஞர், கல்வியலாளர் சேரனின் எழுத்துகள் குறித்து 26 ஆளுமைகளின் ஆய்வுகள், பார்வைகள் அடங்கிய தொகுப்பான “உறைய மறுக்கும் காலம்” நூல் வெளியீட்டு நிகழ்வு 15.07.2025 செவ்வாய்க்கிழமை மாலை 5.30 மணியளவில் யாழ்ப்பாணம் பிரதான வீதியில் அமைந்துள்ள கலைத்தூது கலையக அரங்கில் இடம்பெற்றது.
கவிஞரும் மொழிபெயர்ப்பாளருமான சோ. பத்மநாதன் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் உரைகளினை விரிவுரையாளரும், விமர்சகருமான இ.இராஜேஷ்கண்ணன் மற்றும் விரிவுரையாளரும் எழுத்தாளருமான த. அஜந்தகுமார் ஆகியோரும் நிகழ்த்தினர்.
சிறப்பு பிரதிகளில் முதற்பிரதியினை சோ. பத்மநாதன் அவர்கள் வெளியிட மருத்துவர் குமாரவேள் அவர்கள் பெற்றுக் கொண்டார்.
அமரர் எம். பாலசுப்பிரமணியம் நினைவாக நடாத்தப்பட்ட சிறுகதைப் போட்டியின் யாழ்ப்பாண நிகழ்வு இந்நூல் வெளியீட்டுக்கு முன்னதாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து தமிழ்நாட்டிலிருந்து வருகை தந்திருந்த எழுத்தாளர் பவா செல்லத்துரை, திரைப்பட இயக்குனர் லெனின் பாரதி ஆகியோரின் இலக்கியம், திரைப்படம் குறித்த சிறப்புரைகளும், அதனைத் தொடர்ந்து வாசகர் கலந்துரையாடலும் பதிப்பாளர் பாலசபேசன் அவர்களின் வழிப்படுத்தலில் இடம்பெற்றது.
மாலை 4 மணியில் இருந்து 9 மணி வரை புத்தக கண்காட்சியும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
இலக்கிய ஆர்வலர்கள், கல்வியியலாளர்கள், எழுத்தாளர்கள் எனப் பலரும் இந்நிகழ்வுகளில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
லங்கா4 (Lanka4)
அனுசரணை