Connect with us

சினிமா

ரவீனாவின் குத்தாட்டத்தால் நிகழ்ந்த விபரீதம்.! “DJD” ஷோவிற்கு வந்த பேரடி.! முழுவிபரம் இதோ..

Published

on

Loading

ரவீனாவின் குத்தாட்டத்தால் நிகழ்ந்த விபரீதம்.! “DJD” ஷோவிற்கு வந்த பேரடி.! முழுவிபரம் இதோ..

சின்னத்திரை உலகில் பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றாக வலம் வரும் நிகழ்ச்சி தான் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘டான்ஸ் ஜோடி டான்ஸ்’. தற்போது மூன்றாவது சீசனில் ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. ஆனால், இந்த நிகழ்ச்சியில் ஒளிபரப்பான ஒரு எபிசொட் தற்போது தலைவலியாக மாறியுள்ளது.2025 ஆம் ஆண்டு ஜூலை 12ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை அன்று ஒளிபரப்பான ‘செலிப்ரேஷன் ரவுண்ட்’ எபிசொட் தான் தற்போது விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்த எபிசொட்டில், நடிகை ரவீனா சிலருடன் இணைந்து இந்துக் கடவுள் வேடங்களில் நடனம் ஆடும் காட்சியில் இடம்பெற்றிருந்தார். குறிப்பாக, கடவுள் வேடம் அணிந்தவர்கள், மாடர்ன் ஸ்டெப்ஸ், மியூசிக் ஸ்டைல் ஆகியவற்றோடு கலந்து காட்டப்பட்ட நடனக் காட்சி, சமூக வலைத்தளங்களில் தீவிரமாகப் பகிரப்பட்டதோடு, விபரீதமான விமர்சனங்களையும் பெற்றது.இந்நிகழ்வை பார்த்த இந்து முன்னணி அமைப்பு தங்களுடைய x தளப்பக்கத்தில் மத்திய இணையமைச்சர் எல். முருகன் அவர்களை டாக் செய்து பதிவு ஒன்றை வெளியிட்டது. அதில் அவர்கள், “ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ‘டான்ஸ் ஜோடி டான்ஸ்’ நிகழ்ச்சியில், இந்து கடவுள்களை இழிவுபடுத்தும் வகையில் நடனம் ஆடப்பட்டுள்ளது. இது பாரம்பரியம், மதம், நம்பிக்கையை அசைக்கக் கூடியது. உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.” எனக் கூறியிருந்தனர். அதனைத் தொடர்ந்து சமூக ஊடகங்களில், இந்த நிகழ்வின் மீது கடுமையான எதிர்வினைகள் எழுந்தன. இந்த பதிப்பு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறையின் கவனத்திற்கு வந்த உடனே, அரை மணி நேரத்திற்குள் ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு அதிகாரபூர்வ நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இத்தகவல்கள் தற்பொழுது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன