இலங்கை
ரஷ்யா – உக்ரைன் போர்; மாஸ்கோவை தாக்க ஜெலன்ஸ்கிக்கு டிரம்ப் யோசனை

ரஷ்யா – உக்ரைன் போர்; மாஸ்கோவை தாக்க ஜெலன்ஸ்கிக்கு டிரம்ப் யோசனை
ரஷ்யா – உக்ரைன் இடையிலான போர் 3 ஆண்டுகளைக் கடந்து நடைபெற்று வருகிறது. இந்தப் போரில் பல இலட்சம் பேர் கொல்லப்பட்டு உள்ளனா்.
இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முயற்சித்து வருகிறார்.
அடுத்த 50 நாட்களில் போரை நிறுத்தவில்லை என்றால் ரஷ்யா மீது 100 சதவீதம் பொருளதார தடைகளை விதிப்பேன் என டிரம்ப் எச்சரித்தார்.
ஆனால் டிரம்ப் எச்சரிக்கையை பொருட்படுத்தவில்லை என ரஷ்யா தெரிவித்துள்ளது.
இந்நிலையில் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியுடன் டிரம்ப்பின் தொலைபேசி உரையாடல் கவனம் பெற்று வருகிறது.
அமெரிக்க ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியின்படி, தொலைபேசியில், டிரம்ப் ஜெலன்ஸ்கியிடம்,
“மாஸ்கோவைத் தாக்க முடியுமா? செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கைத் தாக்க முடியுமா?” என்று கேட்டதாகக் கூறப்படுகிறது.
இதற்கு “நிச்சயமாக. நீங்கள் எங்களுக்கு ஆயுதம் வழங்கினால், நாங்கள் அதைச் செய்வோம்” என்று ஜெலென்ஸ்கி பதிலளித்துள்ளாராம்.
முன்னதாக உக்ரைன் தங்கள் நாட்டைப் பாதுகாக்க வேண்டும். நாங்கள் பேட்ரியாட் வான் பாதுகாப்பு ஏவுகணைகளை உக்ரைனுக்கு அனுப்புவோம் என்று டிரம்ப் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
ரஷ்யாவை மோசமாக உணர வைத்து பேச்சுவார்த்தைக்கு வர வைப்பதே தனது யோசனை என்று டிரம்ப் கூறியுள்ளார்.