இலங்கை
வடக்கு மாகாண உயர்மட்ட அதிகாரிகளுக்கு நாளைமுதல் இடமாற்றங்கள்

வடக்கு மாகாண உயர்மட்ட அதிகாரிகளுக்கு நாளைமுதல் இடமாற்றங்கள்
வடக்கு மாகாண உயர்மட்ட அதிகாரிகள் பலருக்கு இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த இடமாற்றங்கள் நாளை வியாழக்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடமாகாண ஆளுநரின் செயலராகக் கடமையாற்றிய மு.நந்தகோபாலன், மகளிர் விவகார, கூட்டுறவு, மறுவாழ்வு அமைச்சின் செயலாளராகவும், பருத்தித்துறைப் பிரதேச செயலராகக் கடமையாற்றிய சி.சத்தியசீலன், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளராகவும், கோப்பாய் பிரதேச செயலராகக் கடமையாற்றிய சிவஸ்ரீ விவசாய அமைச்சின் செயலாளராகவும், விவசாய அமைச்சின் செயலாளராகக் கடமையாற்றிய ஆழ்வார்ப் பிள்ளைஸ்ரீ, பொதுச்சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளராகவும், காணி ஆணையாளராகக் கடமையாற்றிய அ.சோதிநாதன், உள்ளூராட்சி அமைச்சின் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.