இலங்கை
வட்டுவாகல் பாலத்தினூடான பயணம் செய்ய முடியும்!

வட்டுவாகல் பாலத்தினூடான பயணம் செய்ய முடியும்!
வட்டுவாகல் பாலத்தினூடான பாதை உடனடியாக தற்காலிகமாக புனரமைப்பு செய்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போக்குவரத்து நடவடிக்கைகளை தற்போது மேற்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்படுகின்றது.
முல்லைத்தீவு – வட்டுவாகல் பாலத்தில் நேற்று (15) ஏற்பட்ட சிறு உடைவால் வாகனங்கள் குறித்த பாதையூடாக போக்குவரத்து செய்யமுடியாது இருந்தது. உடைவை சரிசெய்யும் பணிகள் நடைபெற்றதால் இன்று (16) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை வட்டுவாகல் பாலம் முற்றாக மூடப்பட்டது.
இதனால் அனைத்து சாரதிகளும் மற்றும் பயணிகளும் இந்த தகவலை கவனத்தில் கொண்டு மாற்று பாதைகளை பயன்படுத்துமாறு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு, தகவல் விடுத்திருந்தது.
இந்நிலையில் பயணிகளின் போக்குவரத்து கருதி முல்லைத்தீவு வீதி அபிவிருத்தி அதிகார சபை (RDA) பொறியியலாளர் தலைமையிலான குழுவினர் உடனடியாக குறித்த பாதையினை சீரமைப்புச்செய்து போக்குவரத்திற்காக குறித்த பாலப்பாதை ஊடாக போக்குவரத்தினை மேற்கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளனர்.
லங்கா4 (Lanka4)
அனுசரணை