பொழுதுபோக்கு
வருங்கால கணவருடன் ‘லிப்லாக்’; எல்.சி.யூ பிரபலத்துடன் காதலை உறுதி செய்த வாரிசு நடிகை: லேட்டஸ்ட் போட்டோ!

வருங்கால கணவருடன் ‘லிப்லாக்’; எல்.சி.யூ பிரபலத்துடன் காதலை உறுதி செய்த வாரிசு நடிகை: லேட்டஸ்ட் போட்டோ!
நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தியும், பிரபல பரதநாட்டியக் கலைஞர் லாவண்யா ஸ்ரீராமின் மகளுமான தாண்யா ரவிச்சந்திரன், தனது திருமண அறிவிப்பால் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். எல்.சி.யூ திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய கவுதம் ஜார்ஜை தாண்யா மணக்கவிருப்பதாக அறிவித்துள்ளார்.இந்த மகிழ்ச்சியான செய்தியை, தனது சமூக வலைத்தள பக்கத்தில், கவுதம் ஜார்ஜுடன் உதட்டு முத்தமிடும் புகைப்படத்தைப் பகிர்ந்து அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார். ஜூலை 15 அன்று இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றதாகவும், 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் திருமணம் நடைபெறும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.2016 ஆம் ஆண்டு வெளியான ‘பலே வெள்ளையத் தேவா’ திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான தாண்யா, தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார். பென்ஸ் திரைப்பட ஒளிப்பதிவாளர் கௌதம் ஜார்ஜுடன் இவரின் நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், திரையுலக பிரபலங்களான சித்தி இட்னானி, காளிதாஸ் ஜெயராம், தேஜூ அஸ்வினி, டாப்சி ஆகியோர் தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.தாண்யா ரவிச்சந்திரன் முதன்முதலில் 2016 ஆம் ஆண்டு வெளியான ‘பலே வெள்ளையத்தேவா’ என்ற தமிழ் திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இப்படத்தில் சசிகுமாருடன் இணைந்து நடித்திருந்தார். இவரது முதல் படம் பெரிய அளவில் பேசப்படவில்லை என்றாலும், அடுத்தடுத்து வாய்ப்புகளைப் பெற்றார். 2017 ஆம் ஆண்டில், இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கத்தில் ‘பிருந்தாவனம்’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.அதே ஆண்டில், விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்த ‘கருப்பன்’ திரைப்படம் இவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது. இப்படத்தில் இவரின் கிராமத்து பெண் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பாராட்டப்பட்டது. அந்த படத்தின் பாடல்களும் ஹிட் கொடுத்தன. தெலுங்கு திரையுலகிலும் கால் பதித்த தாண்யா, 2021 ஆம் ஆண்டு ‘ராஜா விக்ரமார்கா’ என்ற தெலுங்கு படத்தில் நடித்தார்.தமிழில் 2022 ஆம் ஆண்டில் வெளியான ‘நெஞ்சுக்கு நீதி’, ‘மாயோன்’, ‘ட்ரிகர்’ ஆகிய படங்களில் நடித்தார். இதில் ‘நெஞ்சுக்கு நீதி’ திரைப்படம் சமூக கருத்துக்களைப் பேசியது. மேலும், 2022 ஆம் ஆண்டு வெளியான ‘பேப்பர் ராக்கெட்’ என்ற வலைத்தொடரிலும் இலக்கியா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 2023 ஆம் ஆண்டில் ஜெயம் ரவி நடித்த ‘அகிலன்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். சமீபத்தில் (2024) வெளியான ‘ரசவாதி’ படத்திலும் நடித்திருந்தார். ரசிகர்கள் மத்தியில் தனி இடத்தைப் பிடித்த தாண்யாவின் நிச்சயதார்த்த அறிவிப்பு ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது.