இலங்கை
வலி.வடக்கில் உள்ள காணிகளை விடுவிக்கக்கோரி கொழும்பில் நேற்றுப் போர்!

வலி.வடக்கில் உள்ள காணிகளை விடுவிக்கக்கோரி கொழும்பில் நேற்றுப் போர்!
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்குப் பகுதியில், படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி, கொழும்பில் உள்ள ஜனாதிபதி போராட்டம் இடம்பெற்றது.
மன்னார் சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்தி நிறுவனத்தின் ஒருங்கிணைப்பில், வலிகாமம் வடக்கைச் சேர்ந்த பல்வேறு சிவில், சமூக அமைப்புகள் இணைந்து இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தன.
அதியுயர் பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்று போராட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் வலியுறுத்தினார்கள். நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் இந்தப் போராட் டத்தில் கலந்துகொண்டார் என்பது குறிப் பிடத்தக்கது.