இலங்கை
வவுனியாவில் பிரதேச பண்பாட்டு விழாவும் பண்பாட்டு ஊர்திப் பவணியும்

வவுனியாவில் பிரதேச பண்பாட்டு விழாவும் பண்பாட்டு ஊர்திப் பவணியும்
வவுனியா பிரதேச செயலகம் மற்றும் வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் அனுசரணையில் வவுனியா பிரதேச கலாசார பேரவையும் பிரதேச கலாசார அதிகார சபையும் இணைந்து நடாத்தும் பண்பாட்டு ஊர்திப்பவனியும் பிரதேச பண்பாட்டு விழாவும் -2025 மிகச்சிறப்பாக இடம்பெறவுள்ளது.
எதிர்வரும் வெள்ளிக்கிழமை (18.07.2025) பண்பாட்டுபவனி பிரதேச செயலகம் முன்பாக காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதுடன் அரங்க நிகழ்வுகள் பிற்பகல் 3.00 மணிக்கு வவுனியா மாநகரசபை கலாச்சார மண்டபத்தில் நடைபெறும்.
பிரதேச செயலாளர் இ.பிரதாபன் தலைமையில் இடம்பெறவுள்ள இவ் விழாவில் கலைஞர்களுக்கான கலாநேத்ரா விருது வழங்களும் இடம்பெறுகின்றன. அந்த வகையில் பாஸ்கரன் கதீஷன் (ஊடகத்துறை) , நாகராஜா செந்தூர்ச்செல்வன் (பரதம்) , அல்போன்ஸ் மெலிஸ்ரன் (நாடகம்) , சந்திரசேகர் அனோஜன் (ஓவியம்) , செல்வரத்திணம் சண்முகரத்தினம் (இயல்) , சுந்தரம் சிவயோகராஜா (கட்டுரை) , சிவராசா நாகராசா (அறிவிப்பு) , வல்லிபுரம் கந்தப்பு (மெல்லிசை) , சேனாதிராசா சந்திரகாந்தன் (வாத்திய இசை) , மாசிலாமணி தர்மகுலசிங்கம் (வாத்திய இசை) ஆகிய துறைகளை சேர்ந்த கலைஞர்கள் விருதினை பெறுகின்றனர்.
வவுனியாவின் குரல் தெரிவில் தெரிவு செய்யப்பட்ட 18வயதுக்கு உட்பட்டவர்கள் மற்றும் 18வயதுக்கு மேற்பட்டவர்கள் பிரிவில் முதல் மூன்று இடங்களை பெற்றவர்களுக்கான வவுனியாவின் குரல் விருதும் வழங்கி வைக்கப்படவுள்ளன
இவ் பண்பாட்டு பவனி ஊர்தியானது பிரதேச செயலக வரலாற்றில் முதன் முறையான அனைத்து கிராம அலுவலர்கள் பிரிவுகளையும் உள்ளடக்கி அவர்களின் கிராமத்தினை பிரதிபடுத்தும் வகையில் ஊர்தி அலங்கரிப்படவுள்ளமை சிறப்பம்சமாகும்
லங்கா4 (Lanka4)
அனுசரணை