இலங்கை
வெள்ளை ஈ கட்டுப்பாட்டுத் திட்டம் இடங்களும், திகதிகளும் அறிவிப்பு

வெள்ளை ஈ கட்டுப்பாட்டுத் திட்டம் இடங்களும், திகதிகளும் அறிவிப்பு
வெள்ளை ஈ தாக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக, தென்னை பயிர்ச்செய்கை சபையால் முன்னெடுக்கப்படும் செயற்றிட்டங்கள் எங்கு, எப்போது முன்னெடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி பிரதேசசெயலர் பிரிவில் கடந்த மூன்று நாள்களாக இடம்பெற்று வந்த இந்தச் செயற்றிட்டம் இன்றுடன் முடிவுக்கு வருகின்றது. இதன்படி, நாளை மற்றும் நாளை மறுதினம் கோப்பாயில் முன்னெடுக்கப்படவுள்ளது. உதவி தேவைப்படுபவர்கள் 0774409933 என்ற இலக்கத்துக்கு அழைப்பெடுக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் உடுவில் பிரதேச செயலர் பிரிவில் எதிர்வரும் 21ஆம், 22ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளதுடன், உடுவில் பிரதேசசெயலர் பிரிவில் உதவி தேவைப்படுபவர்கள் 0779074230 என்ற இலக்கத்துக்கு அழைப்பெடுக்க முடியும்.
நல்லூர் பிரதேச செயலர் பிரிவில் எதிர்வரும் 23ஆம், 24ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளதுடன், நல்லூர் பிரதேச செயலர் பிரிவில் உதவி தேவைப்படுப்வர்கள் 0778222560 என்ற இலக்கத்துக்கு அழைப்பெடுக்க முடியும்.
அதுபோல், யாழ்ப்பாணம் பிரதேச செயலர் எதிர்வரும் 25ஆம் திகதியன்று இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. யாழ்ப்பாணம் பிரதேச செயலர் பிரிவில் உதவி தேவைப்படுபவர்கள் 0771976959என்ற இலக்கத்துக்கு அழைப்பெடுக்க முடியும்.
வெள்ளை ஈ கட்டுப்பாட்டுச் செயற்றிட்டத்தை மேற்கொள்வதில் ஆளணிப் பற்றாக்குறை காணப்படுகின்றது. பொதுமக்கள் தன்னார்வலர்களாக உதவி செய்ய விரும்பினால், தென்னை பயிர்ச் செய்கைசபையின் உதவிப்பொது முகாமையாளர் ரி.வைகுந்தனைத் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.