சினிமா
ஸ்ரீலீலாவின் சேலை போட்டோஷூட்…!இன்ஸ்டாவையே கொள்ளை கொண்ட கிளாமர்!வைரலாகும் க்ளிக்ஸ்!

ஸ்ரீலீலாவின் சேலை போட்டோஷூட்…!இன்ஸ்டாவையே கொள்ளை கொண்ட கிளாமர்!வைரலாகும் க்ளிக்ஸ்!
தெலுங்கு திரையுலகில் துளிர்த்த நடிகை ஸ்ரீலீலா, தற்போது தமிழ் சினிமாவிலும் தன்னுடைய இடத்தை உறுதி செய்திருக்கிறார். இளம் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றுள்ள இவர், தற்போது சிவகார்த்திகேயன் ஜோடியாக பராசக்தி படத்தில் நடித்து வருகிறார்.தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் தொடர்ந்து வாய்ப்புகள் குவிந்து வரும் நிலையில், ஸ்ரீலீலா தற்போது ஹிந்தி சினிமாவிலும் அறிமுகமாக உள்ளார். கார்த்திக் ஆர்யனுடன் நடிக்கும் படத்தில் , அவருக்கு ஹிந்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ரீலீலா, தனது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார் . சமீபத்தில் வெளியான சேலை அணிந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.மேலும் இவர் “Claire flares and silent stares” என பதிவிட்டிருந்த பதிவும் வைரலாகி வருகின்றது. மேலும் சூடான கிளாமர் படங்கள் மட்டுமின்றி, அழகையும் அழுத்தமாக வெளிப்படுத்தும் ஸ்ரீலீலாவின் இந்த போட்டோஷூட், பலரையும் கவர்ந்துள்ளது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் வளர்ந்து வரும் இவரது பயணம், இன்னும் பல உச்சங்களைத் தொடும் என ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.