இலங்கை
அபிவிருத்தித் திட்டங்களை விரைவாகச் செயற்படுத்துக; உள்ளூராட்சி அமைச்சு அறிவுறுத்து

அபிவிருத்தித் திட்டங்களை விரைவாகச் செயற்படுத்துக; உள்ளூராட்சி அமைச்சு அறிவுறுத்து
அபிவிருத்தித் திட்டங்களை விரைவாகச் செயற்படுத்த வேண்டும் என்று பொதுநிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு உள்ளூராட்சி மன்றங்களுக்கு அறிவித்துள்ளது.
இது தொடர்பில் பிரதி அமைச்சர் ருவன் செனரத் தெரிவிக்கையில்:- கடந்த வரவு – செலவுத் திட்டத்தில் உள்ளூராட்சிமன்றங்களின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக 23 ஆயிரம் மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மாகாண சபைகளின் அபிவிருத்திப் பணிகளுக்காகவும், 53 ஆயிரம் மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் நவம்பர் மாதத்துக்கு முன்னர் அபிவிருத்தி திட்டங்களுக்கு இந்த நிதி பயன்படுத்தப்பட வேண்டும். சில உள்ளூராட்சி மன்றங்களை அமைப்பதில் ஏற்படும் தாமதம் காரணமாக, அவற்றின் அபிவிருத்தி நடவடிக்கைகளும் தாமதமாகியுள்ளன. அந்த உள்ளூராட்சி மன்றங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை மீண்டும் திறைசேரிக்குத் திருப்பி அனுப்ப நேரிடும் – என்றார்.