இலங்கை
அமெரிக்காவிற்கு அழுத்தம் கொடுக்கும் ரணில் விக்கிரமசிங்க

அமெரிக்காவிற்கு அழுத்தம் கொடுக்கும் ரணில் விக்கிரமசிங்க
சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதியில் கையொப்பமிட்டவர் என்ற வகையில், இலங்கையின் கடன் மறுசீரமைப்பு முயற்சிகளுக்கு உதவும் பொறுப்பு, அமெரிக்காவுக்கு உள்ளது என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்கா இப்போது இலங்கைக்கு வரி விடயத்தில் உதவ வேண்டும் என்ற அடிப்படையிலேயே, அவரின் இந்தக்கருத்து வெளியாகியுள்ளது.
அமெரிக்கா இந்த விடயத்தில் உதவவில்லையெனில், அமெரிக்கா குறித்த ஒப்பந்தத்தை மீறுவதாகவே கருத முடியும் என ரணில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தநிலையில், இலங்கை அரசாங்கம் உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்று விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
கடன் மறுசீரமைப்பு விடயத்தில் அமெரிக்கா, இலங்கைக்கு உதவவில்லை என்றால், சர்வதேச நாணய நிதியம் மற்றும் பங்குதாரர்களிடம் அமெரிக்காவிற்குச் சென்று பணத்தை வசூலிக்குமாறு கூறவேண்டும் என ரணில் சுட்டிக்காட்டியுள்ளார்.
வியட்நாமின் தொழில்துறை அமைச்சர், அந்நிய செலாவணி உத்திகள் குறித்து இலங்கையிடம் முன்னர் ஆலோசனை கேட்டதை அவர் இதன்போது நினைவு கூர்ந்தார்.
இன்று வியட்நாம் முன்னணியில் உள்ளது. கம்போடியாவும்.
பங்களாதேசமும் முன்னேறி வருகின்றன.
எனினும் இலங்கை தொடர்ந்தும் பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகிறது என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.