இலங்கை
இளைஞனுக்கு எமனான மோட்டார் சைக்கிள் ; அதீத வேகத்தால் பறிபோன வாழ்க்கை

இளைஞனுக்கு எமனான மோட்டார் சைக்கிள் ; அதீத வேகத்தால் பறிபோன வாழ்க்கை
அரநாயக்க வீதியில் இருந்து வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று, தேவதகம நோக்கி செல்லும் வீதியின் வசந்தகம சந்தி அருகில் உள்ள விமோல பகுதியில் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
விபத்தில் உயிரிழந்தவர் 22 வயதுடைய இளைஞர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிவேகத்தின் காரணமாக வேகக்கட்டுபாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வீதியைவிட்டு விலகி கால்வாய்க்கு அருகிலுள்ளள மின்கம்பத்தில் மோதி குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் காயமடைந்த அடைந்த இளைஞன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.