பொழுதுபோக்கு
இளையராஜா வீட்டு மருமகள்; வனிதா இப்படி சொல்ல காரணம் என்ன? உண்மையை உடைத்த மூத்த பத்திரிக்கையாளர்!

இளையராஜா வீட்டு மருமகள்; வனிதா இப்படி சொல்ல காரணம் என்ன? உண்மையை உடைத்த மூத்த பத்திரிக்கையாளர்!
வனிதா இயக்கத்தில் வெளியான மிஸஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்தில் இடம் பெற்ற சிவராத்திரி பாடலுக்கு எதிராக இளையராஜா வழக்கு தொடர்ந்த நிலையில், நான் அவரது வீட்டு மருமகளாக ஆக வேண்டியது என்று வனிதா விஜயகுமார் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இளையராஜா மனைவி ஜீவா தனது பீரோ சாவியை தன்னிடம் கொடுத்துள்ளார் என்று வனிதா விஜயகுமார் கூறியது குறித்து மூத்த பத்திரிகையாளர் சபிதா ஜோசப் பேசியுள்ளார்.தமிழ் சினிமாவில் சர்ச்சை நாயகியாக வலம் வரும் வனிதா விஜயகுமார், முதல் முறையாக இயக்குனராக அறிமுகமாகியுள்ள படம் மிஸஸ் அண்ட் மிஸ்டர். ராபர்ட் மாஸ்டர் நாயகனாக நடிக்க, வனிதாவே இந்த படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.40 வயதை கடந்த இந்த தம்பதியில் ராபர்ட்க்கு குழந்தை பெற்றுக்கொள்ள விருப்பம் இல்லாதபோதும், வனிதா குழந்தை வேண்டும் என்று முடிவு செய்கிறார். இதனால் இருக்கும் இடையே கருத்து வேறுபாடு வருகிறது. அதன்பிறகு என்ன நடந்தது என்பது தான் கதை.வனிதாவின் மகள் ஜோவிகா தயாரித்துள்ள இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில், எதிர்பார்த்த வெற்றியை பெறவிவல்லை. அதேபோல் படம வெளியான அன்று, படத்தில் இடம் பெற்றுள்ள சிவராத்திரி பாடல் தன்னுடையது என்றும், இதை நீக்க வேண்டும் என்றும் இளையராஜா வழக்கு தொடர்ந்தார். இது குறித்து பேசிய வனிதா, நான் அவர் வீட்டுக்கு மருமகளாக ஆக வேண்டியது, அவரது மனைவி ஜீவா அவரின் வீட்டு நகைகள் அறை சாவியை என்னிடம் கொடுத்து சாமிக்கு பூஜை செய்ய சொன்னதாக கூறியுள்ளார்.இது குறித்து மெட்ரோ மெயில் என்ற யூடியூப் சேனலில் பேசிய மூத்த பத்திரிகையாளர் சபிதா ஜோசப், நம்ம பாட்டை பயன்படுத்தி வனிதா சம்பாதிக்கிறார் என்ற எண்ணம் இளையராஜாவுக்கு வந்துவிடடது. அவர் பல கோடி ரூபாய் வைத்திருக்கிறார். பல வருடம் கழித்து, கஷ்டப்பட்டு சொந்த பணத்தை வைத்து வனிதா ஒரு படம் எடுத்திருக்கார். போனால் போகட்டும் என்று விட்டுக் கொடுத்திருக்கலாம். சாமியார் என்று சொல்லிக்கொண்டு இளையராஜா எல்லாரையுமே பகைத்து கொண்டு வருகிறார்.சாமியார் என்றால் ஆன்மீகத்தோடு அமைதியாக இருக்க வேண்டும். சாமியார்கள் ஆசை, பாசங்களுக்கு அப்பாற்பட்டவர்கள். எஸ்.பி.பி., ரஜினி, கமல், அஜித் என பலருடன் சண்டை போட்டுள்ளார். இப்ப வனிதா கூட சண்டை. வனிதா நேரடியாக வீட்டுக்கு வந்து, இளையராஜாவிடம் அனுமதி வாங்கியதாகவும் சொல்கிறார். அப்போது அனுமதி தந்துவிட்டு, இப்போது வந்து கேஸ் போடுவது சரியில்லை. அதேபோல, இளையராஜா வீட்டுக்கு மருமகளாக போயிருக்க வேண்டியது எனறு வனிதா சொல்வது, கார்த்திக் ராஜாவை நினைத்து இப்படி சொல்கிறாரா அல்லது வேறு யாரையாவது சொல்றாங்களா தெரியவில்லை.இளையராஜா வீட்டில், இளையராஜா மனைவி, ஜீவா இருக்கும்போது ஒவ்வொரு வருடமும் கொலு வைப்பார்கள். அந்த விழாவில், எஸ்பிபி, ஜானகியம்மா, சுசிலாம்மா, எல்ஆர் ஈஸ்வரி, எம்எஸ்வி உட்பட எல்லாருமே கலந்து கொள்வார்கள். இதற்காகவே பிரத்யேகமாக அழைப்பு விடுக்கப்படும். வந்திருக்கும் விருந்தாளிகள் அனைவருக்கும் கிஃப்ட் தருவார்கள். அப்படித்தான் 2 , 3 முறை வனிதா தரப்பினர் சென்றதுபோல தெரிகிறது. அப்போது ஜீவாம்மா சாவி தந்து, நகையை பீரோவில் வைக்க சொல்லியிருக்கிறார்.மிகப்பெரிய நடிகை மஞ்சுளாவின் மகள் என்பதால், அந்த அபிமானத்தில் சொல்லியிருக்கலாம். ஜீவாம்மா காட்டிய பாசத்தை வைத்து, அந்த வீட்டுக்கு மருமகளாக போகலாம் என்று வனிதா நினைத்திருக்கலாம். தன்னுடைய மகளை சினிமாவில் அறிமுகப்படுத்த வேண்டும் என்று மஞ்சுளா அப்போது உறுதியாக இருந்தார். அதன்படியே வனிதாவும் சினிமாவுக்குள் வந்துவிட்டார். எனவே, வனிதா இப்போது சொல்வதை உண்மை என்று சொல்ல முடியாது. அதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. அதேசமயம், இப்போதுவரை வனிதா சொன்னதை எதிர்தரப்பிலிருந்து யாரும் மறுக்கவில்லை என்பதால் பொய் என்றும் சொல்ல முடியாது என கூறியுள்ளார்.