இலங்கை
ஈஸ்டர் தாக்குதல் விடயங்கள் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படும்; பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு

ஈஸ்டர் தாக்குதல் விடயங்கள் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படும்; பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் பிள்ளையான் முன்கூட்டியே அறிந்திருந்தார் என்ற விடயம் உட்பட விசாரணை தொடர்பான தகவல்கள் விரைவில் நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் பிள்ளையான் முன்கூட்டியே அறிந்திருந்தார் என நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின் போது நான் கருத்து வெளியிட்டிருந்தேன். இதற்கமைய வெகுவிரைவில் நீதிமன்றத்திடம் அறிக்கை முன்வைக்கப்படும். நீதிமன்றத்திடம் இந்த விடயம் முன்வைக்கப்பட்ட பின்னர், நீதிமன்றம் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் அறிவுறுத்தல்களுக்கமைய அடுத்தகட்ட விசாரணை முன்னெடுக்கப்படும். தற்போதும் விசாரணை இடம்பெற்றுவருகின்றது. எனினும், விசாரணைகள் மூலம் தெரியவந்த விடயங்களை நீதிமன்றத்துக்கு தெரியப்படுத்த வேண்டும். சில விசாரணைகள் தொடர்பில் நீதிமன்றத்திடம் தற்போது கருத்து வெளியிட முடியாது – என்றார்.